சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த சீரியல் ஹீரோ வருணுக்கு நிறைய கேர்ள் ஃபேன்ஸ்தான். இவரது நிஜப் பெயர் விராட். கர்நாடக மாநிலம் ஹுப்ளியை சேர்ந்தவர். பெங்களூருவில் உள்ள பிஎச்எஸ் கல்லூரியில் பிஎஸ்சி அனிமேஷன் படித்துள்ளார். 12 ஆம் வகுப்பு படிக்கும்போதே சினிமா இன்டஸ்ட்ரிக்குள் நுழைந்தார். 2006 ஆம் ஆண்டு வெளியான 'பிளாக்' என்ற கன்னட படம்தான் இவரது முதல் படம். அந்தப் படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்திருந்தார். பிறகு, '10th க்ளாஸ் ஏ செக்ஷன்' படத்தில் ஹீரோவாக நடித்தார். இங்கிருந்துதான் இவரது நடிப்புப் பயணம் தொடங்கியது. அதன்பிறகு பட வாய்ப்புகள் குறைந்ததால் கன்னட சின்னத்திரைக்குள் நுழைந்தார்.
Advertisment
நீண்ட இடைவெளிக்கு பிறகு சுப விவாஹா என்ற கன்னட டிவி சீரியலில் ஹீரோவாக நடித்தார். அது செம ஹிட் ஆனது. அதற்கு பிறகு நிகாரிகா கன்னட சீரியலில் நடித்து வந்தார். அப்போதுதான் தமிழ் சின்னத்திரையில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. கலர்ஸ் தமிழ் சேனலில் 2018ல் ஒளிபரப்பான பேரழகி சீரியலில் ப்ருத்வி கேரக்டரில் நடித்தார். அந்த தொடரில் இவருக்கு சூப்பர் ஸ்டார் ரோல். இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சிறுவயதிலேயே அதிக தமிழ் படங்களை பார்க்கும் பழக்கம் இருந்ததால் தமிழ் எளிதாக கற்றுக்கொண்டார்.
அதன் பிறகு சன்டிவியில் அன்பே வா சீரியலில் நடிக்க இவரை கேட்டுள்ளனர். ஓகே சொல்லி நடிக்க தொடங்கினார். வருண் என்ற கேரக்டரில் பூமிகாவுடன் நடித்து வருகிறார். இவர்களது ரொமன்ஸ் சீன்களை பார்க்கவே தனி கூட்டம் உள்ளது. சமூக வலைதளங்களில் இவர்களுக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ் பேஜஸ் தான். அந்த அளவிற்கு இவரது நடிப்பு ரீச் ஆகியுள்ளது. தற்போது இந்த சீரியல் நல்ல டிஆர்பியில் உள்ளது.
நடிப்பைப் பொருத்தவரை, விராட்டுக்கு கமல், விக்ரம் ஃபேவரேட். நடிப்பை தாண்டி இவர் ஒரு டெக்னீஷியன் மற்றும் பாடகர். யூடியூப்பில் வீடியோ பார்த்து கிராபிக்ஸ் கற்றுக்கொண்டு பல படங்களுக்கு கிராபிக்ஸ் செய்துள்ளார். இவருடைய மெயின் ஹாபி பாடுவதுதான்.அதை தாண்டி டான்ஸ், பெயிண்டிங். விராட்டின் குடும்பமே இந்துஸ்தானி இசை பின்னணியை கொண்டது. இந்துஸ்தானி இசையை முறைப்படி கற்றுள்ள இவர் ஐந்தாறு கன்னட படங்களில் பின்னணி பாடகராக பணியாற்றியுள்ளார். விராட்டுக்கு அம்மானா உயிர். ஷூட்டிங்கில் எவ்ளோ பிசியாக இருந்தாலும் ஒருநாளைக்கு 10 கால் செய்து அம்மாவிடம் பேசிவிடுவாராம். ரிமோட் கன்ட்ரோல் கார் மாதிரியான பொம்மைகள் மிகவும் பிடிக்குமாம். இவர் வீடு முழுக்க நிறைய பொம்மைகளை வாங்கி அடுக்கி வைத்துள்ளார்.
சினிமாவில் மிகப் பெரிய ஸ்டாராக வர வேண்டும் என்பதுதான் விராட்டின் ஆசை.