சன்டிவியில் 2014ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா சீரியலில் நடித்து பிரபலமானவர் ஸ்வேதா பந்தேகர்.இதில் சந்திரா, நிலா ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ்நாட்டை சேர்ந்தவர். சென்னையில் உள்ள பிரபல பி.எம்.ஆர். கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்துள்ளார். காலேஜ் படிக்கும் போது ஆரம்பத்தில் ஒரு சில விளம்பர படங்களில் நடித்து வந்தார். பிறகு அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 2007 ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ஆழ்வார் திரைப்படத்தில் அவரின் தங்கையாக நடித்திருந்தார்.முதல் படமே தலயுடன் என்பதால் அடுத்து படத்திலேயே ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ந்து வள்ளுவன் வாசுகி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தை மறுமலர்ச்சி படத்தை இயக்கிய பாரதி தான் இயக்கி இருக்கிறார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனால் கிடைக்கும் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தெலுங்கில் சடுகுடு, பூவா தலையா, பயணங்கள் தொடரும், மீராவுடன் கிருஷ்ணா, வீரச்சோழன் போன்ற பல படங்களில் நடித்தார். கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூலோகம் படத்திலும் நடித்திருந்தார்.

சின்தால் சோப், உதயகிருஷ்ணா நெய் போன்ற விளம்பரங்களில் நடித்து ரொம்பவும் ரீச் ஆனார். இவருக்கு சினிமா கை கொடுக்கவில்லை என்றாலும் சின்னத்திரை நன்றாகவே கை கொடுத்தது. சின்னத்திரையில் ஸ்வேதா முதலில் அறிமுகமானது 2009ஆம் ஆண்டு சன்டிவியின் ஒளிபரப்பான மகள் சீரியல் தான். அதன்பிறகு 2014ல் சந்திரலேகா தொடரில் நடித்து வந்தார். இந்த தொடர் மூலம் உலகளாவிய தமிழ் மக்கள் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறார். தற்போது 1800 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த தொடர். இதில் நடித்ததற்காக நடிகை ஸ்வேதாவிற்கு சிறந்த நடிகை என்ற விருதும் கிடைத்தது. ஜீ தமிழின் லட்சுமி வந்தாச்சு, சன்டிவியின் நிலா போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.

சந்திரலேகா சீரியலில் இவர் பத்திரிக்கையாளராக தையரியமான பெண்ணாக நடித்து பல பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர். இதனால் இவருக்கு பெண் ரசிகர்கள் ஏராளம். சீரியலில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார். அவ்வபோது தனது ஃபோட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களிடையே வைரலாக்கி வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”