Advertisment

முதல் படம் டிராப்... அடுத்த படம் வெளியாகலை... இப்போ சித்தி 2 டபுள் ரோல்! விடாமுயற்சியால் வென்ற கவின்

chithi 2 serial update: சிறு வயதில் சித்தி சீரியலை தனது அம்மாவுடன் சேர்ந்து ஒரு எபிசோட் கூட விடாமல் பார்ப்பாராம் கவின்.

author-image
WebDesk
New Update
chithi 2 serial hero nandan loganathan

chithi 2 serial hero nandan loganathan

சித்தி 2 சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து கலக்கி வருகிறார் கவின். இவரது நிஜப் பெயர் நந்தன் லோகநாதன். பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை மந்தைவெளியில்தான். லயோலா கல்லூரியில் பி.காம் முடித்துள்ளார். நடிப்புத்துறைக்கு வர வேண்டும் என்பது இவரது எண்ணமாக இருந்ததில்லை. இவர் 2007 ல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது டைரக்டர் பாலுமகேந்திராவை சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்துள்ளது. கவினை பார்த்ததும் நடிப்பில் ஆர்வம் உள்ளதாக என கேட்ட அவர், போட்டோ ஷூட் எடுக்க சொல்லியுள்ளார். பிறகு போட்டோக்களை பார்த்துவிட்டு அவரின் அடுத்த படமான அனல் காற்றில் நடிக்கவைப்பதாக கூறியுள்ளார். அதன்பிறகு அடிக்கடி டைரக்டர் பாலுமகேந்திரவை சந்தித்து பேசியுள்ளார். அவர் சினிமாவைப் பற்றி பேசப் பேச கவினுக்கு நடிப்பின் மேல் ஆர்வம் வந்துள்ளது. இந்தநிலையில் பாலுமகேந்திரா படம் பாதியில் ட்ராப் ஆகியுள்ளது.இதனால் மனம் தளராத கவின் வேற ஃபீல்டுக்கு போவதை பற்றி யோசிக்காமல் தொடர்ந்து முயற்சி செய்து வந்துள்ளார்.

Advertisment
publive-image

அதன்பிறகு கட்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால் அதுவும் சில பிரச்சனைகளால் ரிலீஸ் ஆகவில்லை. முதல் படம் ட்ராப். இரண்டாவது படம் வெளியாகலைனு கவலைப்படாமல் அடுத்த வாய்ப்பை தேடி பயணித்து கொண்டிருந்தார். சன்டிவி, Event Management, விஜய் டிவியின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி போன்ற ஷோக்களில் துணை இயக்குநகராக, writer ஆக பணிபுரிந்தார். அப்போதுதான் தனது நண்பனான டைரக்டர் சர்ஜூன் எடுத்த லட்சுமி என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். அந்த ஷார்ட் பிலிம் பண்ண பிறகு பயங்கர ரீச்.

publive-image

இந்த குறும்படத்திற்கு நிறைய அவார்டுகள் கிடைத்தது. பாராட்டுகள், விமர்சனங்கள் ரெண்டுமே வந்துள்ளது. பிறகு கலர் தமிழில் கலர்ஸ் சூப்பர் ஹிட் ஷோவில் ப்ரோடியூசராக இருந்தபோது தான் அந்த சேனலில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள வந்தான் ஸ்ரீதேவி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த தொடரில் சித்தார்த் என்ற கேரக்டரில் நடித்தார். திரைப்படங்களை காட்டிலும் சீரியலிகளில் வரும் கதாபாத்திரங்கள் தினமும் தோன்றுவதால் மக்கள் மனதில் எளிதில் பதியும். இந்த தொடருக்கு ரசிர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதைதொடர்ந்து 2019ல் சித்திரம் பேசுதடி சீரியலில் கதிர் என்ற கேரக்டரில் நடித்தார்.

publive-image

சீரியல் உலகம் பெண்களுக்கானது அதில் ஆண்கள் எப்போதும் இரண்டாம்பட்சம்தான் என கூறும் கவினுக்கு வீட்டில் நல்ல சப்போர்ட். சிறிது நாட்கள் எந்த வாய்ப்பும் கிடைக்காமல் இருந்தவருக்கு ரேடான் கதவை தட்டியுள்ளது. லட்சுமி குறும்படம் பார்த்துவிட்டு சித்தி 2 வில் கவின் ரோல் பன்ன நந்தனை கேட்டுள்ளனர். ராதிகா சீரியல் என்றதும் உடனே ஓகே சொல்லி நடிக்க தொடங்கியுள்ளார். இந்த சீரியலுக்கு பிறகு கவினுக்கு ஏகப்பட்ட கேர்ள் ஃபேன்ஸ். சிறு வயதில் சித்தி சீரியலை தனது அம்மாவுடன் சேர்ந்து ஒரு எபிசோட் விடாமல் பார்ப்பாராம்.

publive-image

தற்போது சித்தி2 வில் இவரே நடிப்பது அவரின் அம்மாவிற்கு சந்தோஷமாம். கவின் வெண்பா ரொமன்ஸை பார்ப்பதற்காகவே தனி கூட்டம் உள்ளது. ராதிகா சீரியலை விட்டு விலகினாலும் அதே டிஆர்பியில் சித்தி 2 கலக்கி வருவதற்கு இவரது நடிப்பு முக்கிய காரணம்.தற்போது இந்த நீரியலில் டபுள் ரோலில் வேறு நடித்து வருகிறார். இதற்கிடையில் கடந்த 2019 ஆண்டு அனிதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். வெப் சீரீஸ், சீரியல், திரைப்படங்கள்னு எதுவாக இருந்தாலும் தன்னை நம்பிக் கொடுக்கும் கதாபாத்திரங்களை நிறைவா நடிச்சுக் கொடுக்கணும் என்கிறார் கவின்.

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Sun Tv Chithi 2 Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment