Tamil serial latest news: சித்தி 2 சீரியலில் இருந்து ராதிகா விலகியும் அந்த தொடர் வெண்பாவின் நடிப்பால் வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது.
டிக்டாக் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் ப்ரீத்தி ஷர்மா. 22 வயதாகும் ப்ரீத்திக்கு சொந்த ஊர் லக்னோ.தற்போது கோயம்புத்தூரில் குடும்பத்தோடு செட்டில் ஆகியுள்ளனர். ப்ரீத்தி 11 ம் வகுப்பு படிக்கும்போது `கட்டதுரைக்குக் கட்டம் சரியில்ல’ என்ற டெலி ஃபிலிம் மூலம் தான் மீடியாவுக்குள் வந்துள்ளார். பிறகு பிளஸ் 2 படிக்கும்போது மாடலிங் துறையில் இருந்துள்ளார். கல்லூரி படித்துக்கொண்டிருந்தபோது ‘எங்க போன ராசா’ என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான திருமணம் சீரியல் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்து. அந்த சீரியலில் இவர் அனிதா கேரக்டரில் நடித்திருந்தார். நவீனை உருகி உருகி காதலிக்கும் பெண்ணாக நடித்து இருந்ததால், நெட்டிசன்கள் மத்தியில் நவீன் – அனிதா ஜோடி பிரபலமாகியது. இவர்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. திருமணம் தொடரின்போது இந்த ஜோடி ரியலாகவே காதலித்து வந்ததாக கூறப்பட்டது. பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர்.

திருமணம் சீரியலில் நடித்துக்கொண்டிருந்தபோதே அவருக்கு சித்தி 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சித்தி 2 மற்றும் திருமணம் சீரியல்களுக்கு தேதிகள் சரியாக ஒத்து வராததால்தான் திருமணம் சீரியலில் இருந்து விலகினார். அதன்பிறகு சித்தி 2 சீரியலில் நந்தன் லோகநாதன் ஜோடியாக வெண்பா வேடத்தில் நடிக்க துவங்கினார். அந்த தொடரில் அவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது சன்டிவி சீரியலில் அதிக டிஆர்பி வரும் தொடராக உள்ளது சித்தி 2. இதற்கு முன்னர் வரை சீரியலின் முதன்மையாக இருந்து வந்த ராதிகா இந்த சீரியலில் இருந்து விலகியதும் பலர் சீரியலை சீக்கிரமாக முடித்து விடுவார்கள் என எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் அதே விறுவிறுப்போடு வெண்பா – கவின் ரொமான்ஸ் வைத்துக்கொண்டு இந்த சீரியல் போய்க்கொண்டிருக்கிறது. திரைப்படங்களை மிஞ்சும் அளவிற்கு ரொமான்ஸ் சீன்களும் முத்த காட்சிகளையும் இந்த சீரியலில் வைத்து டைரக்டர் எடுத்திருந்தாலும் அசால்டாக அதில் தனது நவரசத்தையும் காட்டி ரசிகர்களை நன்றாகவே ரசிக்க வைத்திருக்கிறார் ப்ரீத்தி. பின்னணி பாடகி ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததால், நடிப்பிலும் கலக்கி வருகிறார்.தன்னுடைய அழகான நடிப்பினாலும் கியூட்டான எக்ஸ்பிரஸ்னாலும் ரசிகர்களை கட்டி இழுத்து வைத்திருக்கிறார்.

சித்தி சீரியல் ஓடிக்கொண்டிருந்தபோது குழந்தையா இருந்தேன். ஆடிஷன் அட்டன் பண்ணும்போது சித்தி 2 னு தெரியாது என ப்ரீத்தி கூறியுள்ளார். என்னதான் சீரியல் ல நடிச்சாலும் வெளிய தெரியனும்னா சமூக வலைதளங்களில் போட்டோ வீடியோ பதிவிட்டுக்கொண்டே இருக்கனும் என யோசிக்கும் ப்ரீத்தி இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வபோது புகைப்படங்கள் வெளியிடுவது, டப்ஸ்மாஷ் செய்வது, நடனம் ஆடுவது போன்ற பல வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். இவருக்கு படவாய்ப்புகள் வந்தாலும் நல்ல வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார். நல்ல கதை அமைந்தால் வெள்ளித்திரையிலும் விரைவில் ஹீரோயின்தான்.
“இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“