“சினிமா கைவிட்டாலும் சீரியல் விடல” சின்னத்திரையின் சாக்லேட் பாய்… சித்தி2 கவின் பர்சனல் பக்கம்!

லட்சுமி குறும்படத்தில் நடித்ததன் மூலம் பயங்கர ரீச் ஆனார் நந்தன் லோகநாதன்.

chithi2, nandan loganathan

சன்டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் சித்தி2. இந்த தொடரில் கவின் என்ற கேரக்டரில் ஹீரோவாக நடித்து வருகிறார் நந்தன் லோகநாதன். சென்னையில் பிறந்து வளர்ந்தவர். லயோலா கல்லூரியில் பி.காம் முடித்துள்ளார். 2007ஆம் ஆண்டு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது டைரக்டர் பாலுமகேந்திராவை சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்துள்ளது. கவினை பார்த்ததும் நடிப்பில் ஆர்வம் உள்ளதாக என கேட்ட அவர், போட்டோ ஷூட் எடுக்க சொல்லியுள்ளார். பிறகு போட்டோக்களை பார்த்துவிட்டு அவரின் அடுத்த படமான அனல் காற்றில் ஒரு கேரக்டர் ரோல் தருவதாக கூறியுள்ளார். அதன்பிறகு அடிக்கடி டைரக்டர் பாலுமகேந்திரவை சந்தித்து பேசியுள்ளார். அவர் சினிமாவைப் பற்றி பேசப் பேச கவினுக்கு நடிப்பின் மேல் ஆர்வம் வந்துள்ளது.

இந்த நிலையில் பாலுமகேந்திராவின் படம் டிராப் ஆகியுள்ளது. அதன்பிறகு கட்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால் அதுவும் சில பிரச்சனைகளால் ரிலீஸ் ஆகவில்லை. முதல் படம் ட்ராப். எனினும் அடுத்த வாய்ப்பை தேடி பயணித்து கொண்டிருந்தார். சன்டிவி, Event Management, விஜய் டிவியின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி போன்ற ஷோக்களில் துணை இயக்குநகராக, writer ஆக பணிபுரிந்தார். அப்போதுதான் தனது நண்பனான டைரக்டர் சர்ஜூன் எடுத்த லட்சுமி என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். அந்த ஷார்ட் பிலிமில் நடித்த பிறகு பயங்கர ரீச் கிடைத்தது. இந்த குறும்படத்திற்கு நிறைய அவார்டுகள் கிடைத்தது. பாராட்டுக்கள், விமர்சனங்கள் இரண்டையும் தேடி தந்தது இந்த குறும்படம்.

பிறகு கலர் தமிழில் கலர்ஸ் சூப்பர் ஹிட் ஷோவில் ப்ரோடியூசராக இருந்தபோது தான் அந்த சேனலில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள வந்தாள் ஸ்ரீதேவி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த தொடரில் சித்தார்த் என்ற கேரக்டரில் நாயகனாக நடித்தார். திரைப்படங்களை காட்டிலும் சீரியலிகளில் வரும் கதாபாத்திரங்கள் தினமும் தோன்றுவதால் மக்கள் மனதில் எளிதில் பதியும். இந்த தொடருக்கு ரசிர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பிறகு 2019ல் சித்திரம் பேசுதடி2 என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

சீரியல் உலகம் பெண்களுக்கானது அதில் ஆண்கள் எப்போதும் நம்பர் 2வாகத்தான் வர முடியும் என கூறும் கவினுக்கு வீட்டில் நல்ல சப்போர்ட். சிறிது நாட்கள் எந்த வாய்ப்பும் கிடைக்காமல் இருந்தவருக்கு ரேடான் கதவை தட்டியுள்ளது. லட்சுமி குறும்படம் பார்த்துவிட்டு சித்தி 2 வில் நடிப்பதற்கு நந்தனை கேட்டுள்ளனர். ராதிகா சீரியல் என்றதும் உடனே ஓகே சொல்லி நடிக்க தொடங்கியுள்ளார். இந்த சீரியலுக்கு பிறகு இவரது கவின் கேரக்டருக்கு ஏகப்பட்ட கேர்ள் ஃபேன்ஸ். சிறு வயதில் சித்தி சீரியலை தனது அம்மாவுடன் சேர்ந்து ஒரு எபிசோட் விடாமல் பார்ப்பாராம் நந்தன்.

தற்போது சித்தி2 வில் இவரே நடிப்பது அவரின் அம்மாவிற்கு மிகப் பெரிய சந்தோஷமாம். கவின் வெண்பா ரொமேன்ஸ் சீன்களை பார்ப்பதற்காகவே தனி கூட்டம் உள்ளது. ராதிகா சீரியலை விட்டு விலகினாலும் அதே டிஆர்பியில் சித்தி 2 கலக்கி வருவதற்கு இவரது நடிப்பு முக்கிய காரணம். ஜெமினி டிவியில் புதிய சீரியல் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் கடந்த 2019 ஆண்டு அனிதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். வெப் சீரீஸ், சீரியல், திரைப்படங்கள்னு எதுவாக இருந்தாலும் தன்னை நம்பிக் கொடுக்கும் கதாபாத்திரங்களை நிறைவா நடிச்சுக் கொடுப்பேன் என்கிறார் சின்னத்திரையின் சாக்லேட் பாய் நந்தன் லோகநாதன்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Suntv serial chithi2 kavin nandan loganathan biography

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com