Advertisment

என் கரியர் சிங்கர்ன்னு ஃபிக்ஸ் பண்ணியிருந்தேன்… ஆனா இப்போ சீரியல் நடிகை… சித்தி2 வெண்பா ஷேரிங்ஸ்!

Sun Tv Serial Actress: ப்ரீத்தி 11 ம் வகுப்பு படிக்கும்போது கட்டதுரைக்குக் கட்டம் சரியில்ல என்ற டெலி ஃபிலிமில் நடித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
preethi sharma

சன் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் தொடர் சித்தி2. இந்த சீரியல் நாயகி வெண்பாவின் பெயர் பீரித்தி ஷர்மா. டிக்டாக் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர். சொந்த ஊர் லக்னோ. தற்போது கோயம்புத்தூரில் குடும்பத்தோடு செட்டில் ஆகியுள்ளனர். ப்ரீத்தி 11 ம் வகுப்பு படிக்கும்போது கட்டதுரைக்குக் கட்டம் சரியில்ல என்ற டெலி ஃபிலிமில் நடித்துள்ளார். இதன் மூலம் தான் மீடியாவுக்குள் வந்துள்ளார். பிறகு மாடலிங் செய்து வந்தார்.பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார். கல்லூரி படித்துக்கொண்டிருந்தபோது ‘எங்க போன ராசா’ என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார்.

Advertisment

பிறகு கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான திருமணம் சீரியல் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த சீரியலில் இவர் அனிதா கேரக்டரில் நடித்திருந்தார். நவீனை உருகி உருகி காதலிக்கும் பெண்ணாக நடித்து இருந்ததால், நெட்டிசன்கள் மத்தியில் நவீன் – அனிதா ஜோடி பிரபலமாகியது. இவர்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. திருமணம் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோதே அவருக்கு சித்தி 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இரண்டு தொடரிலும் நடிக்க தேதிகள் ஒத்து வராததால் திருமணம் தொடரில் இருந்து விலகினார். பிறகு சித்தி 2 சீரியலில் நந்தன் லோகநாதன் ஜோடியாக வெண்பா என்ற ரோலில் நடிக்க துவங்கினார்.

சன்டிவி சீரியல்களில் நல்ல டிஆர்பியில் ஓடிக்கொண்டிருக்கிறது சித்தி2. ராதிகா விலகினாலும் கவின்-வெண்பா ஜோடியால் இந்த தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரைப்படங்களை மிஞ்சும் அளவிற்கு ரொமான்ஸ் சீன்களும் முத்த காட்சிகளையும் இந்த சீரியலில் வைத்து டைரக்டர் எடுத்திருந்தாலும் அசால்டாக அதில் தனது நவரசத்தையும் காட்டி ரசிகர்களை நன்றாகவே ரசிக்க வைத்திருக்கிறார் ப்ரீத்தி. பின்னணி பாடகி ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததால், நடிப்பிலும் கலக்கி வருகிறார். கென் கருணாஸ் மற்றும் அவரது அம்மா கிரேஸ் ஆகியோர் இடம்பெறும் ‘வாடா ராசா’ என்ற மியூசிக்கல் ஆல்பத்திலும் நடிகை ப்ரீத்தி ஷர்மா இடம் பெற்றுள்ளார்.

சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவானவர் ப்ரீத்தி ஷர்மா. இன்ஸ்டாகிராமில் தனது விதவிதமான ஃபோட்டோஷூட் புகைப்படங்கள், ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். வெஸ்டர்ன், பிரைடல் என ஒரு நடிகையாக அனைத்து வகை காஸ்டியூம்களிலும் ஃபோட்டோஷூட் எடுக்கனும் என்கிறார். இவருக்கு பொட்டிக் ஷாப் திறந்து விதவிதமான காஸ்டியூம்களை குறைந்த விலையில் விற்பதற்கு ஆசையாம். பட வாய்ப்புகள் நிறைய வந்தாலும் நல்ல கதைக்காக காத்திருக்கிறார். பிடித்தமான கதை அமைந்தால் நிச்சயம் சினிமாவில் என்ட்ரி கொடுப்பாராம் பீரித்தி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actress Preethi Sharma Chithi2 Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment