கிளாசிக்கல் டான்ஸர், 90’s ஹீரோயின், சீரியல் மம்மி.. கண்ணான கண்ணே புஷ்பா லைஃப் ஸ்டோரி!

கல்லூரி படிக்கும்போது மலையாளத்தில் மௌனம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் நடிகை சாந்தி ஆனந்த்.

shanthi anandh

கண்ணான கண்ணே சீரியலில் யுவாவின் அம்மாவாக நடித்து வருபவர் சாந்தி ஆனந்த். சென்னையை சேர்ந்த இவர் எஸ்ஐஇடி கல்லூரியில் பிஏ பொருளாதாரம் படித்துள்ளார். கிளாசிக்கல் டான்ஸரான இவர் ஏராளமான மேடை நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஆடியுள்ளார். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. முதன் முதலில் மலையாளத்தில் மௌனம் என்ற தொடரில் அறிமுகமானார். அந்த தொடரில் வழக்கறிஞராக நடித்தார். பின்னர் தான் தமிழ் சினிமாவில் நுழைந்தார். நடிகர் பார்த்திபனின் தங்கையாக “சுகமான சுமைகள்” திரைப்படத்தில் நடித்தார்.

அந்த படத்தில் இவரது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் கௌரி மனோகரி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படம் நல்ல ரீச் ஆனது. தொடர்ந்து எங்க தம்பி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். கோகுலம் படத்தில் அர்ஜூனின் தங்கையாக நடித்துள்ளார். டூயட் என்ற படத்திலும் கேரக்டர் ரோல் நடித்திருந்தார். பின்னர் 1995ல் திருமணம் செய்து கொண்ட இவர் 5 வருடங்கள் நடிப்பில் இருந்து விலகினார். பின்னர் 2000ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கிய சீரியல்கள் நடிக்க தொடங்கினார். ஜன்னல் என்ற சீரியல் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். பிறகு ஆசை, ஆடுகிறான் கண்ணன் போன்ற ஏராளமான தொடர்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.

ஆடுகிறான் கண்ணன் என்ற தொடரில் முதலில் நெகட்டிவ் ரோலில் நடித்தார். அந்த தொடர் மிகப் பெரிய ஹிட் கொடுத்தது. தொடர்ந்து நிறைய சீரியல்களில் வில்லியாக நடித்து ரீச் ஆனார். ராமானுஜர் தொடரில் ராமானுஜரின் மாமியாராக நடித்தார். ரோமபுரி பாண்டியன் என்ற சரித்திர கதையில் நடித்தார். சொந்தபந்தம், அபூர்வ ராகங்கள், என் இனிய தோழியே, லட்சுமி வந்தாச்சு என தொடர்ச்சியாக சீரியல்களில் நடித்தார். தற்போது சன்டிவியில் கண்ணான கண்ணே, ஜீ தமிழில் செம்பருத்தி தொடர்களில் நடித்து வருகிறார். ஒரு பக்கம் சீரியல்களில் நடித்து வந்தவர் மறுபுறம் திரைப்பட வாய்ப்புகளையும் விடுவதாக இல்லை. சினிமா, சீரியல், டாகுமெண்டரி என எதுவாக இருந்தாலும் நடிப்பில் கலக்கி வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Suntv serial kannana kanne pushpa actress shanthi anandh biography

Next Story
பாலில் விளக்கெண்ணெய், பிட்சா, பர்கருக்கு தடை – ஷியாமந்தா கிரண் பியூட்டி சீக்ரெட்ஸ்!Serial Actress Syamantha Kiran Beauty Secrets Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com