மாடல்.. கிளாசிக்கல் டான்ஸர்… கன்னட ஹீரோயின்.. கண்ணான கண்ணே பிரீத்தி லைஃப் ஸ்டோரி

suntv serial news: அக்ஷிதாவுக்கு மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் என பல மொழி நடிகையாக இருக்க வேண்டும் என்பது ரொம்ப ஆசையாம்.

akshitha

கண்ணான கண்ணே சீரியலில் நடித்து வரும் பிரீத்திக்கு ஃபேன்ஸ் அதிகம். இவரது நிஜப் பெயர் அக்ஷிதா போபையா. கர்நாடகாவை சேர்ந்தவர். மைசூரில் கல்லூரி படிப்பை முடித்துள்ளார் .சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிகம் ஆர்வம் இருந்ததால் மாடலிங் செய்து வந்துள்ளார். பிறகு 2017 ல் ‘ரியல் போலீஸ்’ என்கிற கன்னட படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ச்சியாக பல பட வாய்ப்புகள் கிடைத்தது. கன்னடத்தில் ‘அம்பி நிங் வயசைதோ’ , பி5, ஷிவார்ஜூனா போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இதில் ஷிவார்ஜூனா படம் நல்ல ஹிட் ஆனது.

கன்னடத்தில் பட வாய்ப்புகள் குறைந்ததால் தமிழ் சின்னத்திரையில் நுழைந்தார். முதன் முதலில் சன்டிவியின் அழகு சீரியல் மூலம் அறிமுகமானார். நிவி என்கிற கதாபாத்திரத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருந்தார். சில மாதங்களிலேயே அவரது கேரக்டருக்கு நல்ல ரீச் கிடைத்தது. அடுத்தடுத்து சீரியல் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. ஜீ தமிழின் ரெக்க கட்டி பறக்குது மனசு, விஜய்டிவியின் தாழம்பூ, லட்சுமி ஸ்டோர்ஸ் போன்ற சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் பாப்புலரானார். கலர்ஸ் சூப்பரில் ஒளிபரப்பான ஷாந்தம் பாப்பம் தொடரிலும் நடித்தார்.

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கால் படபிடிப்புகள் ரத்தானதால் சொந்த ஊர் திரும்பியுள்ளார். சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் சன்டிவியின் சீரியல் வாய்ப்பு கதவை தட்டியுள்ளது. கண்ணான கண்ணே சீரியலில் பிரீத்தி கேரக்டரில் அப்பாவின் செல்ல மகளாக நடித்து வருகிறார். அக்கா மீரா மீது பாசத்தை பொழியும் தங்கையாக நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்துள்ளார். இந்த சீரியலுக்கு பிறகு அக்ஷிதா ரொம்ப பாப்புலரானார். சமூக வலைதளங்களில் பிரீத்திக்கு நிறைய ஃபேன்ஸ் பேஜஸ். ரசிகர்களின் கமெண்டுகளுக்கு தவறாமல் ரிப்ளை கொடுத்து விடுவாராம்.

பள்ளியில் படிக்கும்போதே அக்ஷிதாவுக்கு ஸ்போர்ட்ஸ் ரொம்ப பிடித்த ஒன்று. இவர் பரதநாட்டிய டான்ஸரும் கூட. முறைப்படி பரதநாட்டியம் கற்றுள்ளார். காலேஜ் படிக்கும்போது இவர் டாம்பாய் போல தான் டிரெஸ் பன்னுவாராம். ஜூனியர்ஸை ராக்கிங் பன்னுவது சண்டை போடுவது என அடாவடியாக இருப்பது இவருக்கு பிடித்தமான ஒன்றாம். அக்ஷிதாவுக்கு மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் என பல மொழி நடிகையாக இருக்க வேண்டும் என்பது ஆசையாம். அதுவும் மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் பெரிய நடிகர்களுடன் படம் நடிக்க வேண்டும் என்பது அக்ஷிதாவின் கனவு..

சீரியல்களில் மாடனாக நடித்தாலும் இன்ஸ்டாவில் படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை தெறிக்க விடுகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Suntv serial kannana kanne serial actress preethi akshitha bopaiah biography

Next Story
தியானம் யோகா முதல் காய்கறி பழங்கள் வரை… உடல் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க 5 வழிகள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express