தெலுங்கு நியூஸ் ரீடர் டூ தமிழ் சீரியல் ஆக்டர்ஸ்.. மகராசி மல்லிகாவின் லைஃப் ட்ராவல்..

suntv serial actress: மாடலிங் செய்துவந்தபோதே நிறைய சினிமா வாய்ப்புகள் வந்தாலும் மௌனிகா பெரிதாக படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை

mounika devi

மகராசி தொடரில் மல்லிகா கேரக்டரில் நடித்து வருகிறார் மௌனிகா. சென்னையில் பிறந்து ஆந்திராவில் வளர்ந்தவர். சிறு வயதிலிருந்தே மௌனிகாவிற்கு நடிக்க வேண்டும் என்பது ஆசை. ஸ்கூல் படித்தபோது நிறைய டிராமா, டான்ஸ் போட்டியில் பங்கேற்றுள்ளார். இவரது அப்பா பிஸினஸ்மேன். ஆந்திராவில் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். பிறகு ஆங்கரிங் ஆசையில் தெலுங்கு செய்தி தொலைக்காட்சியில் நியூஸ் ரீடராக இரண்டு வருடங்கள் வேலை செய்து வந்துள்ளார். அதன்பிறகு சென்னை வந்ததும் மாடலிங் செய்து பண்ண ஆரம்பித்துள்ளார். இதனால் விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. 100க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்து பாப்புலரானார்.

மௌனிகாவின் விளம்பரங்களை பார்த்து விஜய் டிவியில் ஆடிஷனுக்கு அழைத்துள்ளனர். அவளும் நானும் சீரியலுக்கு ஆடிஷன் அட்டன் பண்ணவர் செலக்ட் ஆகியுள்ளார். ஆரம்பமே நிலா, தியா என்கிற இரட்டை கதாபாத்திரம். முதலில் மொழி தெரியாமல் ரொம்பவே கஷ்டப்பட்டுள்ளார். அதன்பிறகு தமிழ் பேச கற்றுக்கொண்டார். அறிமுகமான முதல் சீரியலே செம ஹிட் ஆனது. மௌனிகாவின் நடிப்புக்கு ஏகப்பட்ட பேன்ஸ் ஃபாலோவர்ஸ். இவர் முதலில் அறிமுகமானது வெள்ளித்திரையில்தான். கௌதம் கார்த்திக்-நிக்கி கல்ராணி நடிப்பில் 2017ல் வெளியான ‘ஹரஹர மஹாதேவகி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். பிறகு கலைஞர் டிவியில் பூவே செம்பூவே தொடரில் நடித்து வந்தார். ஆனால் கொரோனா காரணமாக சீரியல் பாதியில் நிறுத்தப்பட்டது.

தற்போது மீண்டும் ஒரு மெகா ஹிட் சீரியலில் சிறப்பு வேடத்தில் நடித்து வருகிறார். மகராசி சீரியலில் மல்லிகாவாக நடிக்கிறார். ரீசண்ட்டாக சீரியலில் இணைந்தாலும் இவர் நடிப்புக்கு நல்ல ரீச் கிடைத்து வருகிறது. மாடலிங் செய்துவந்தபோதே நிறைய சினிமா வாய்ப்புகள் வந்தாலும் மௌனிகா பெரிதாக படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இவருக்கு மாடலிங், சீரியல் ரெண்டும் தான் மெயின் எய்ம். அதனால் நிறைய பட வாய்ப்புகளை தவிர்த்துள்ளார்.

மௌனிகாவிற்கு நெகட்டிவ் ரோலில் நடிப்பது ரொம்பவே பிடிக்குமாம். அதுவும் படையப்பா நீலாம்பரி போல் ஒரு கதையில் நடிக்க வேண்டும் என்பது ஆசையாம். சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்கிறார். ஃபோட்டோஷூட் நடத்தி தனது வித விதமான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். சீரியலில் லீட் ரோலில் நடிக்கும் வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளார் மௌனிகா.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Suntv serial magarasi malliga mounika devi biography

Next Story
சிவப்புத் தோலும் பாலியல் தேர்வும்… கறுப்பு என்பது வெறுப்பா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com