சினிமா, சீரியல்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லி ரோல்களில் நடித்து புகழ் பெற்றவர் கே.எஸ்.ஜெயலட்சுமி. கவிதாலயாவின் நிரந்தர நடிகைகளுள் இவரும் ஒருவர். கே பாலச்சந்திரின் திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார். முதலில் ஒரு கன்னடத்தில் தான் அறிமுகமானார். பிறகு எதற்கும் துணிந்தவன் படத்தில் சிவக்குமார் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். திருமணத்திற்கு பிறகு படங்களில் சான்ஸ் கிடைக்காததால் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். பிறகு, கேரக்டர் மற்றும் காமெடி ரோல்களில் நடித்த இவர் `மூடுபனி' படத்தில் வில்லியாக நடித்து பிரபலமானார்.
Advertisment
கவுண்டமணி, செந்திலுடன் பல படங்களில் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார். தொடர்ந்து அதிர்ஷ்டகாரன், அக்னி சாட்சி, பொய்க்கால் குதிரை, மனதில் உறுதி வேண்டும், காதலே நிம்மதி, புதுப்புது அர்த்தங்கள் லவ் டுடே, கண்ணன் வருவான், பம்மல் கே சம்பந்தம் போன்ற 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். திரைப்படங்களில் அதிகம் நெகட்டிவ் ரோல்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரையில் இவர் கடைசியாக நடித்த திரைப்படம் சரவணன் இருக்க பயமேன் தான்.
சின்னத்திரைக்குள் நுழைந்தவர் தூர்தர்ஷனின் பல சீரியல்களில் நடிக்க தொடங்கினார். கே.பாலச்சந்தர் மற்றும் விகடன் சீரியல்களில் அதிகம் நடித்துள்ளார். காசளவு நேசம், சித்தி, அலைகள், அண்ணாமலை, மனைவி, லட்சுமி, அத்திப்பூக்கள், உறவுகள், வள்ளி, பொன்னூஞ்சல், பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், மன்னன் மகள், சந்திரலேகா, வம்சம் என 20க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். சீரியல்களில் அதிகம் நெகட்டிவ் ரோல்களில் நடித்து ரசிகர்களிடையே ரீச் ஆனார்.
சினிமாவைவிட சீரியல்தான் ஜெயலட்சுமிக்கு ஒரு அடையாளத்தை தந்தது. பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ளார். தற்போது சன்டிவியின் பாண்டவர் இல்லம் சீரியல், ஜீ தமிழின் புது புது அர்த்தங்கள், ஜீ தமிழின் நீதானே எந்தன் பொன்வசந்தம் என மூன்று டாப் சீரியல்களில் நடித்து வருகிறார். சினிமா, சீரியல்களில் எந்த ரோல்னாலும் நடித்து அசத்தி வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil