scorecardresearch

அஜித் பட நடிகை.. சின்னத்திரையில் மிரட்டும் வில்லி.. பூவே பூச்சூடவா தேவிப்பிரியா பயோகிராபி!

செல்வி, செல்லமே, சந்திரகுமாரி என ராதிகாவின் சீரியல்களில் தேவிப்பிரியாவிற்கு ஒரு ரோல் இருக்கும்.

அஜித் பட நடிகை.. சின்னத்திரையில் மிரட்டும் வில்லி.. பூவே பூச்சூடவா தேவிப்பிரியா பயோகிராபி!

தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் தேவிப்பிரியா. மதுரையை சேர்ந்தவர். சென்னையில் B.A.Literature படித்துள்ளார். இவர் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது பெண் சிசு வதைக்காக டாக்குமெண்ட்ரி பண்ணியுள்ளார். அதன் மூலமாக ராஜீவ் மேனன் இயக்கத்தில் 1997ல் வெளியான மின்சார கனவு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். அதன் பிறகு உயிரோடு உயிரோடு உயிராக படித்தில் நடித்தார். பின்னர் ‘தல’ அஜித் இன் வாலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அவரது கேரக்டர் நன்றாக பேசப்பட்டது.

தொடர்ந்து ஊரு விட்டு ஊரு வந்து, ஏரிக்கரை பூங்காற்றே போன்ற பல படங்களில் நடித்தார். பெரியத்திரையில் சில படங்களிலேயே நடித்தவர் சின்னத்திரைக்குள் நுழைந்தார். சன்டிவியில் ஒளிபரப்பான சக்தி சீரியல் மூலம் தான் என்ட்ரி ஆனார். அதில் போதைக்கு அடிமையாகும் கல்லூரி மாணவியாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர். இந்த தொடருக்கு பிறகு அவருக்கு பல்வேறு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவருக்கு அதிகமான கேரக்டர்கள் வில்லி ரோல்தான். அவ்வளவு கச்சிதமாக வில்லத்தனமாக நடிப்பார்.

பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான தெக்கத்திப் பொண்ணு சீரியலிலும் பிரமாதமான நடிப்பையும் அழகான வசன உச்சரிப்பையும் வெளிப்படுத்தி நடித்திருந்தார். சின்னத்திரையிலும் அத்திப்பூக்கள், ஆசைகள், அச்சம் மடம் நாணம், சொர்க்கம் போன்ற தொடர்களில் போலீஸ் கேரக்டரில் நடித்தார். பாசமலர், ரோமபுரி பாண்டியன், லட்சுமி வந்தாச்சு, வந்தாள் ஸ்ரீதேவி, செல்லமே, விதி, சந்திரலேகா, நீலி, களத்துவீடு, மணிக்கூண்டு, என் தோழி என் காதலி என் மனைவி, பந்தம் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். ராதிகாவின் சீரியல்களில் இவருக்கென தனி இடம் உண்டு.

செல்வி, செல்லமே, சந்திரகுமாரி என ராதிகாவின் சீரியல்களில் தேவிப்பிரியாவிற்கு ஒரு ரோல் இருக்கும். நடிப்பை தாண்டி டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார். சீமராஜா படத்தில் சிம்ரனுக்கும் புதுப்பேட்டை படத்தில் சினேகாவுக்கும் தாமிரபரணி படத்தில் நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார். சீரியலில் நடித்தாலும் சினிமாவையும் விடவில்லை. சரோஜா, வல்லமை தாராயோ, கவலை வேண்டாம், கத்துக்குட்டி, மஞ்சப்பை, நாயகன், ஏரிக்கரை பூங்காற்றே போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நாயகன், விஞ்ஞானி, என் ஆளோட செருப்ப காணோம் ஆகிய படங்களில் போலீஸ் கெட்அப்பில் கலக்கியுள்ளார். இதுவரை 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார் தேவிப்பிரியா. இவரது அழகான கண்களுக்கே தனி ஃபேன்ஸ் உண்டு. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சன்டிவியின் பூவே பூச்சூடவா மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் புது புது அர்த்தங்கள் தொடரில் தேவையாணியுடன் நடித்து வருகிறார். பல திருப்புமுனைகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த இரண்டு சீரியல்களிலுமே நெகட்டிவ் கேரக்டர் தான். பயங்கர வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். 25 ஆண்டுகளாக தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் பயணம் செய்து வருகிறார் தேவிப்பிரியா.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Suntv serial poove poochudava actress devipriya biography