தெலுங்கு சினிமா அறிமுகம்.. தமிழ் சின்னத்திரையில் டாப் ஆக்டர்ஸ்.. ரோஜா சீரியல் பிரியங்கா லைஃப் ட்ராவல்!

முதலில் தெலுங்கில் இயக்குநர் சந்திரா சித்தார்த்தா இயக்கத்தில் வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் நடித்தார்.

priyanka nalkari

சன்டிவியின் செம ஹிட் ஆக சென்று கொண்டிருக்கும் சீரியல் ரோஜா. இந்த தொடரின் நாயகி பிரியங்கா நல்காரி. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்தவர். டான்ஸரான இவர் ஏராளமான நிகழ்ச்சிகளில் ஆடியுள்ளார். பள்ளி பருவத்திலேயே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட பிரியங்கா, தெலுங்கு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். முதன் முதலில் தெலுங்கில் இயக்குநர் சந்திரா சித்தார்த்தா இயக்கத்தில் வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து தெலுங்கில் திலீப்பின் ‘நா சாமி ரங்கா’, ராமின் ‘ ஹைப்பர்’, ராணா டகுபதியின் ‘நேனே ராஜு நேனே மந்திரி’ என அடுத்தடுத்து சில திரைப்படங்களில் நடித்தார். அதன் பிறகு ஈ டிவியில் ஒளிபரப்பான ‘மேகமாலா’ மற்றும் ஜெமினி டிவியில் ஒளிபரப்பான ‘ஸ்ரவனா சமீராலு’ ஆகிய இரண்டு சீரியல்களிலும் நடித்து வந்தார். தமிழில் இவரது முதல் அறிமுகம் தீயா வேலை செய்யனும் குமாரு தான். அந்த படத்தில் ஹன்சிகாவின் தோழியாக திவ்யஸ்ரீ என்ற கேரக்டரில் நடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 12 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார் பிரியங்கா. பிறகு லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தில் ஒரு கேரக்டர் ரோல் நடித்திருந்தார்.

தமிழ் சின்னத்திரையில் பிரியங்கா அறிமுகமான முதல் சீரியலே பயங்கர ஹிட். ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த சீரியல் தற்போது 800 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அர்ஜூன்-ரோஜா ரொமான்ஸ் காட்சிகளுக்கே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த தொடர் தமிழ் ரசிகர்களிடையே பிரியாங்காவிற்கு தனி அடையாளத்தை ஏற்படுத்தி தந்துள்ளது. எக்ஸ்பிரஷனோடு நடிப்பதில் பிரியங்கா எக்ஸ்பர்ட். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 15க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். இவர் நடிக்க வந்து 18 வருடங்கள் ஆகிறதாம். ஆனால் கடந்த 4 வருடங்களாக தான் ரோஜாவிற்கு நடிப்பில் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ரோஜா சீரியலில் நடித்ததற்காக சன் குடும்பம் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த நடிகை, பெஸ்ட் ஜோடி போன்ற விருதுகளை வென்றுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார் பிரியங்கா. எங்கு சென்றாலும் அந்த இடத்தில் இருந்து ஒரு கிளிக் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். ஒரே சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் டாப் நடிகையாக இருக்கிறார் பிரியங்கா.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Suntv serial roja priyanka nalkari biography

Next Story
புதினா நிலக்கடலை சட்னி செஞ்சு தோசைக்கு தொட்டு சாப்பிட்டா… வேற லெவல் ரெசிபி இதுChutney recipes in tamil: simple steps to make Peanut Mint chutney in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com