படித்தது இன்ஜினியரிங்…டிக்டாக் மூலம் சீரியல் என்ட்ரி: திருமகள் அஞ்சலி ஃலைப் ஸ்டோரி

thirumagal serial update: கடந்த 2019ஆண்டு ஜெமினி டிவியில் ஒளிபரப்பான கல்யாணி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் ஹரிகா.

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் திருமகள் சீரியலில் நடித்து வருபவர் அஞ்சலி. இந்த தொடரில் இவரது துணிச்சலான கேரக்டருக்கு ரசிகர்கள் ஏராளம். இவருடைய நிஜப் பெயர் ஹரிகா ஸாடு. ஆந்திர மாநிலம் அனந்த்புர் பகுதியை சேர்ந்தவர். ஆந்திராவில் பிரபலமாக உள்ள இன்டெல் இன்ஜினியரிங் கல்லூரியில் இன்ஜினியரிங் முடித்துள்ளார்.சிறு வயது முதலே நடிப்புத் துறையில் ஜொலிக்க வேண்டும் என்பது ஆசையாக இருந்துள்ளது. சினிமா பின்புலம் இல்லாததால் இவர் தன்னுடைய நடிப்பு திறமையை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வந்தார். டிக்டாக், டப்ஸ்மாஷ்களில் இவர் பதிவிடும் வீடியோக்களுக்கு நிறைய ஃபாலோவர்ஸ் இருந்தனர்.

இந்த வீடியோக்களுக்கு கிடைத்த வரவேற்பு இவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 2019ஆண்டு ஜெமினி டிவி மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். இவரை ஜெமினி டிவி குழு தொடர்புக்கொண்டு ஆடிஷன்னுக்கு வரவழைத்துள்ளது. அதில் செலக்ட் ஆனார். பின்பு “கல்யாணி ” என்ற தொடரில் கதாநாயகியாக நடித்தார். காதல் கதை என்பதால் தன் நடிப்பால் மக்கள் மனதில் எளிதில் இடம்பிடித்தார் ஹரிகா. இத்தொடர் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தமிழ் சின்னத்திரைக்குள் நுழைந்தார். 2020ஆம் ஆண்டு ஆதித்ய இயக்கத்தில் சன்டிவியின் திருமகள் தொடர் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.

இந்த தொடர் ஜெமினி ஜெமினி தொலைக்காட்சில் 2015 ஆம் ஆண்டு வெளியான Atho Athamma Kuthuro தொடரின் ரீமேக் ஆகும். இந்த தொடரில் சுரேந்தர் ஷண்முகத்துடன் இணைந்து அஞ்சலியாகக் கலக்கி கொண்டு இருக்கிறார். சீரியல் முதல் சினிமா வரை அனைத்து ஹீரோயின்களும் மார்டனாக இருக்கும் காலத்தில், நம் நாட்டு கலாச்சாரம் மாறாத பெண்ணாக பாவாடை தாவணி உடுத்தி வந்து எல்லோர் மனதிலும் பளிச்சென அமர்ந்து விட்டார் அஞ்சலி. இந்த தொடரில் மிகவும் தைரியமான பெண்ணாக வலம் வருக்கிறார்.

தற்போது 150 எபிசோடுகளை கடந்து பல திருப்புமுனைகளுடன் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. திருமகள் சீரியல். தாய் மொழியான தெலுங்கில் இவருக்குப் பல ரசிகர்கள் உள்ளனர் தற்போது இவருக்குத் திருமகள் தொடரின் மூலமும் தமிழ் ரசிகர்களும் அதிகரித்து உள்ளனர். ஹரிகாவின் கேரக்டரில் சீரியலை போலவே நிஜத்திலும் அப்படித்தானாம். இவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்பது ஆசையாம். நன்றாக தமிழ் கற்றுக்கொண்டு பேசி வருகிறார் ஹரிகா.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவரது சினிமா ஆசை விரைவில் நிறைவேறும் என எதிர்ப்பார்க்கலாம்..

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Suntv serial tamil thirumagal anjali harika saddu biography

Next Story
சத்தான ஈவினிங் ஸ்நாக்ஸ்.. பீட்ரூட் கட்லெட் செய்வது எப்படி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com