17வயதில் சினிமா அறிமுகம்.. சீரியலில் அழகு முதல் தாலாட்டு வரை.. நடிகை சஹானா ஷெட்டி பயோகிராபி!

Sun Tv Serial: வெள்ளித்திரையில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சஹானா சன்டிவியின் அழகு சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் என்ட்ரி ஆனார்.

sahana shetty

சன்டிவியின் முன்னணி சீரியல்களில் நடித்து வருபவர் சஹானா ஷெட்டி. பூர்வீகம் ஆந்திரா. படித்து வளர்ந்ததெல்லாம் சென்னையில்தான். இசை குடும்பத்தை சேர்ந்த இவருக்கு சிறு வயதிலிருந்தே நடிப்பு மீது ஆசை. 17 வயதில் சினிமாவில் என்ட்ரி ஆனார். அரூபம் என்ற படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து கொக்கிரகுளம், போங்கடா நீங்களும் உங்க ஆட்டமும், இவளுங்க இம்சை தாங்க முடியல, உன்னால் என்னால், சயணம் போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். சில படங்கள் திரைக்கு வராமலும், பெரிய அளவில் இவரது கேரக்டருக்கு அங்கீகாரம் கிடைக்காமலும் இருந்தது.

ஏராளமான டெலிஃபிலிம்களிலும் நடித்து வந்தார். சமுத்திரகனியின் காயிதம் படத்திலும் நடித்துள்ளார். பாலாவின் தார தப்பட்டை படத்தில் டானஸராக நடித்தது இவருக்கு சினிமாவில் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. விஜய் ஆண்டனியின் சலீம் படத்திலும் நடித்திருக்கிறார். வெள்ளித்திரையில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் சின்னத்திரைக்குள் நுழைந்தார். சன் டிவியின் அழகு சீரியிலில் ரேவதியின் மகளாக காவ்யா என்ற கேரக்டரில் சீரியலில் அறிமுகமானார். அழகு சீரியல் செம ஹிட்டானதை தொடர்ந்து காவ்யா கேரக்டருக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து விஜய் டிவியின் பகல்நிலவு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழ் என்ற கேரக்டரில் நெகட்டிவ் ரோலில் நடித்து பாப்புலரானார். இந்த தொடரில் அர்ஜூனை ஒன் சைடாக விரும்புவது போல் நடித்திருப்பார் சஹானா. சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் வில்லியாக நடித்து வரவேற்பை பெற்றவர். கொரோனாவால் சீரியல் வாய்ப்புகள் ஏதும் இன்றி இருந்தவர் தற்போது சன்டிவியின் இரண்டு முன்னணி சீரியல்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

கண்ணான கண்ணே தொடரில் அபர்ணா என்ற ரோலிலும், தாலாட்டு சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார். சினிமாவில் கிடைக்காத ரீச் சீரியலில் கிடைத்துள்ளதாக கூறும் சஹானாவிற்கு சினிமாதான் முதல் சாய்ஸ். பெரிய படங்களில் கேரக்டர் ரோல்னாலும் நடிக்க ஆர்வமாக உள்ளார். நடிகை சஹானா ஷெட்டி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளவர். அவ்வபோது ஃபோட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Suntv serial thalattu kannana kanne sahana shetty biography

Next Story
பயம், மட்டன், பசும்பால், யோகா – ப்ரெக்னென்ட் ஃபரீனா ஷேரிங்ஸ்!Bharathi Kannamma Farina Azad about her Pregnancy Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com