திருமகள் சீரியலில் வில்லி ஆனந்தவல்லியாக அசத்தி வருபவர் ஜீவிதா. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை சேர்ந்தவர். அப்பா பிஸினஸ்மேன். கல்லூரி படிப்பை முடித்தவர் லோக்கல் சேனலில் காம்பியராக வேலை செய்து வந்துள்ளார். சென்னையில் ஏதாவது ஒரு டான்ஸ் இன்ஸ்டிடியூட்டில் டான்ஸ் கற்றுக்கொண்டு, சொந்த ஊரில் டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிக்கலாம் என சென்னை வந்துள்ளார். பிறகு ஷுட்டிங் பார்ப்பதற்காக ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு சென்றவருக்கு நடிப்பதற்கு சான்ஸ் கிடைத்துள்ளது. இப்படித்தான் இவரது மீடியா பயணம் ஆரம்பித்துள்ளது.

2013ல் முதலில் மனதில் உறுதி வேண்டும் என்ற சீரியல் மூலமாகத்தான் நடிப்புத்துறையில் நுழைந்துள்ளார். அதில் இவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து வைராக்கியம் தொடரில் நடித்தார். அதற்குபின் ஆபிஸ் சீரியலில் வில்லி சௌந்தர்யாவாக நடித்து நல்ல ரீச் ஆனார். இதை தொடர்ந்து சன்டிவியின் தேவதை, பாசமலர், மெல்லத் திறந்தது கதவு, நிலா, கண்மணி, ஜீ தமிழின் எங்க வீட்டுப்பெண், சிவரகசியம் போன்ற பல தொடர்களில் முக்கியமான ரோல்களில் நடித்துள்ளார். அதிலும் விஜய் டிவியின் கல்யாணமாம் கல்யாணம் சீரியலில் மாடர்ன் வில்லியாக நடித்து அசத்தியிருந்தார். பல சீரியல்களில் வில்லியாக நடித்திருந்தாலும் இந்த தொடர்தான் ஜீவிதாவை ரொம்ப பாப்புலராக்கியது.

தற்போது சன்டிவியின் திருமகள் சீரியலில் ஆனந்தவல்லி என்ற ரோலில் நடித்து வருகிறார். இதிலும் வில்லி கேரக்டர்தான். ரொம்பவே டெடிக்கேட்டிவ் ஆர்டிஸ்ட். சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும்போதே வெள்ளித்திரையில் அறிமுகமானார். பிறகு சப்போர்ட்டிங் ரோல் பண்ண ஆரம்பித்துள்ளார். ஆண் தேவதை படத்தில் இளவரசு ஜோடியாக, வண்டி என 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஜீவிதா.

லேட்டஸ்ட்டாக கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியின் அக்காவாக நடித்து மிகவும் பிரபலமானவர். இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்த சில படங்கள் இன்னும் வெளியாகாமல் உள்ளது. ஜீவிதா ஒரு ஸ்போர்ட்ஸ் உமனும் கூட. சினிமா, சீரியல் என எதில் சான்ஸ் கிடைத்தாலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார் ஜீவிதா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil