சன்டிவியில் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ள தொடர் வானத்தை போல. இது அண்ணன் தங்கச்சி பாசத்தை அடிப்படையாக கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் நாயகியாக நடித்து வருபவர் துளசி. அண்ணன் சின்ராசு மீது பாசத்தை பொழியும் தங்கையாக நடித்து வருகிறார். இவரது நிஜப்பெயெர் ஸ்வேதா கெல்ஜ். கர்நாடகாவை சேர்ந்த இவர் பெங்களூருவில் வசித்து வருகிறார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பெங்களூரூவில் முடித்துள்ளார். ஏஎம்சி இன்ஜினியரிங் கல்லூரியில் ECE படித்துள்ளார். ஐடி துறையில் பணியாற்றி வந்த இவர், நடிப்பு மீதான ஆர்வத்தால் மாடலிங் செய்துகொண்டிருந்தார். அப்போது தான் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. முதன் முதலில் கலர்ஸ் கனடா சேனல் தொடரில் நடித்தார்.
Advertisment
அதன் பிறகு 2019 ஆண்டு ஜெமினிடிவியில் மதுமாசம் என்ற தெலுங்கு சீரியலில் நடித்தார். ஷ்ரவயா எனும் கேரக்டரில் நடித்தார். இந்த சீரியல் நல்ல ஹிட் ஆனது. இதன் மூலம் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்தார். கன்னடத்தில் அறிமுகம் ஆனாலும் தெலுங்கில் தான் நல்ல பெயர் கிடைத்தது. பல குறும்படங்கள் மற்றும் ஆல்பம் சாங்கில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். தெலுங்கு, கன்னட சீரியலில் நடித்தபோது கிடைத்த ரீச்சால் தமிழில் அறிமுகமாக வாய்ப்பு கிடைத்தது. சன்டிவியின் வானத்தை போல சீரியலில் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். நடிகர் தமன் குமாருக்கு தங்கையாக நடித்து வருகிறார். சின்ராசு-துளசி இடையேயான அண்ணன் தங்கை செண்டிமெண்ட் பாசமலர் ரேன்ஞ்சுக்கு உள்ளது. இவர்களுக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ். துளசி வெற்றியை காதலித்தாலும், அண்ணனுக்கு வேறு கல்யாணத்துக்கு ஒத்துக்கொள்வது என பல சுவாரஸ்ய திருப்பங்களுடன் 100 எபிசோடுகளை கடந்து வானத்தைபோல சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது.
Advertisment
Advertisements
சீரியலில் துளசி கேரக்டருக்கு நேர்மாறனவர் ஸ்வேதா. எப்பொழுதும் நண்பர்களுடன் அவுட்டிங் போவது ரொம்ப பிடித்தமான விஷயமாம். நடிப்பை தாண்டி ஸ்வேதா ஒரு டானஸரும் கூட. பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டுள்ளார். ஆரம்பத்தில் Event Organizer ஆகவும் சிறுது காலம் இருந்துள்ளார். அதன்பிறகு நடிப்பில் பிசியானதால் அதை தொடர முடியவில்லை.
சீரியலில் ஹோம்லியாக நடித்தாலும் ஸ்வேதாவுக்கு மார்டன் தான் மிகவும் பிடித்தான ஒன்று. அவ்வபோது போட்டோஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். சீரியலில் பாவாடை தாவணியில் வலம் வரும் துளசி, இன்ஸடாவில் மார்டன் உடையில் கலக்கி வருகிறார். சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"