கன்னட அறிமுகம்… தெலுங்கில் பாப்புலர் நடிகை.. சீரியலில் பாசமலர் சாவித்ரி… வானத்தைப் போல துளசி பர்சனல் ப்ரொஃபைல்!

கன்னடத்தில் அறிமுகமானாலும் தெலுங்கு சீரியல் மூலம் தான் ரசிகர்களிடையே பிரபலமானார் வானத்தைப் போல துளசி.

swetha kheldge

சன்டிவியில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர் வானத்தைப்போல. பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடரில் வெற்றி காதாபாத்திரத்தில் திலக்கும், துளசியாக ஸ்வேதா கெல்கே, சின்ராசுவாக தமன் குமார், சந்தியாவாக தேப்ஜனி மோடக் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அண்ணன் – தங்கை இடையேயான பாசத்தை மையமாக கொண்டு கதை நகர்ந்து வருகிறது. இதில் துளசி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஸ்வேதா கெல்ஜ். அண்ணன் சின்ராசு மீது பாசத்தை பொழியும் தங்கையாக நடித்து வருகிறார். கர்நாடகாவை சேர்ந்த இவர் பெங்களூருவில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.

ஏஎம்சி இன்ஜினியரிங் கல்லூரியில் ECE படித்துள்ளார். ஐடி துறையில் பணியாற்றி வந்த இவர், நடிப்பு மீதான ஆர்வத்தால் மாடலிங் செய்து வந்தார். நிறைய விளம்பரங்களிலும் நடித்துள்ளார். அப்போது தான் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. முதன் முதலில் கலர்ஸ் கனடா சேனலில் ஒளிபரப்பான சீரியலில் அறிமுகமானார். பின்னர் 2019ஆம் ஆண்டு ஜெமினி டிவியில் ஒளிபரப்பான ‘மதுமாசம்’ என்ற தெலுங்கு சீரியலில் நடித்தார். அதில் இவர் நடித்த ஷ்ரவயா எனும் கேரக்டர் நல்ல ரீச் ஆனது. வெள்ளித்திரையில் வாய்ப்பும் வந்தது. தெலுங்கு மொழியில் ஒரு படத்தில் நடித்தார்.

கன்னடத்தில் அறிமுகம் ஆனாலும் தெலுங்கில் தான் ரசிகர்களிடையே பிரபலமானார். தொடர்ந்து பல குறும்படங்கள் மற்றும் ஆல்பம் சாங்கில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். தெலுங்கு, கன்னட சீரியலில் நடித்தபோது கிடைத்த ரீச்சால் தமிழில் அறிமுகமாக வாய்ப்பு கிடைத்தது. சன்டிவியின் வானத்தை போல சீரியலில் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். நடிகர் தமன் குமாருக்கு தங்கையாக நடித்து வருகிறார். சின்ராசு – துளசி இடையேயான அண்ணன் தங்கை செண்டிமெண்ட் பாசமலர் ரேன்ஞ்சுக்கு உள்ளது. இவர்களுக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ்.

துளசி – வெற்றி இடையேயான காதல் காட்சிகளும் மிகவும் ரசிக்கும்படி நடித்திருப்பார். தற்போது 200 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது வானத்தைபோல தொடர். அறிமுகமான முதல் தமிழ் சீரியலிலேயே தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளார். சீரியலில் நடிக்கும் துளசி கேரக்டருக்கு நிஜத்தில் அப்படியே நேர்மாறாக இருப்பாராம் ஸ்வேதா. எப்பொழுதும் நண்பர்களுடன் அவுட்டிங் போவது ரொம்ப பிடித்தமான விஷயமாம். நடிப்பை தாண்டி ஸ்வேதா ஒரு டானஸரும் கூட. பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டுள்ளார்.

தொடக்கத்தில் Event Organizer ஆகவும் சிறுது காலம் இருந்துள்ளார். அதன்பிறகு நடிப்பில் பிசியானதால் அதை தொடர முடியவில்லை. சீரியலில் ஹோம்லியாக நடித்தாலும் ஸ்வேதாவுக்கு மார்டன் தான் மிகவும் பிடித்தான ஒன்று. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார் ஸ்வேதா. அவ்வபோது போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். சீரியலில் பாவாடை தாவணியில் வலம் வரும் துளசி, இன்ஸ்டாவில் மார்டன் உடையில் கலக்கி வருகிறார். சினிமாவில் சான்ஸ் கிடைத்தாலும் நடிக்கலாம் என்றிருக்கிறார் ஸ்வேதா கெல்க்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Suntv serial vanathai pola thulasi swetha khelge biography

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com