80களில் 5 மொழி ஹீரோயின்… சின்னத்திரையில் ஜாலியான பாட்டி.. சுந்தரி சீரியல் காந்திமதி லைஃப் ட்ராவல்..

suntv serial actress: முதன் முதலில் தமிழில் 1972ஆம் ஆண்டு ‘வாழையடி வாழை’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் பி.ஆர்.வரலட்சுமி.

varalaskshmi

சுந்தரி சீரியலில் அப்பத்தாவாக நடித்து வரும் காந்திமதியின் பெயர் பி.ஆர். வரலட்சுமி. 1966ல் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். 70களிலும், 80களிலும் பல மொழிகளில் நடித்துள்ளார். 1980களில் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். முதன் முதலில் தமிழில் 1972ஆம் ஆண்டு ‘வாழையடி வாழை’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். எம்ஜிஆருக்கு ஜோடியாக நவரத்தினம், கமலுக்கு ஜோடியாக சங்கர்லால் என உச்சநட்சத்திரங்களுக்கு நாயகியாக நடித்தவர். ஜெயலலிதா, என்டிராமராவ் போன்ற தலைவர்களுடன் நடித்துள்ளார்.

இரண்டு தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர். முத்துராமன் மற்றும் கார்த்திக், சிவாஜி கணேசன் மற்றும் அவரது மகன் பிரபு, தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா மற்றும் அவரது மகன் மகேஷ் பாபுவுடன் நடித்துள்ளார். ஜெமினி கணேசன், கமல்ஹாசன், முத்துராமன்,ஏவிஎம் ராஜன் மற்றும் பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.தெய்வ வம்சம், சுவாதி நட்சத்திரம், டைகர் தாத்தாச்சாரி, தசாவதாரம், நவரத்தினம், மணமகளே வா, துர்கா, வா மகளே வா, கோபுர தீபம், நான் அவனில்லை போன்ற படங்களில் நடித்து பிரபலமாக அறியப்பட்டார்.

1966ஆம் ஆண்டு மலையாளத்தில் தாரவட்டம்மா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். இதுவரை 5 மொழிகளில் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு சிறிய பிரேக் எடுத்து பூவே உனக்காக, நான் அவனில்லை என இளைய தலைமுறையினருடன் நடிக்க ஆரம்பித்தார். கடைசியாக தமிழில் 2019ஆம் ஆண்டு கண்ணாடி திரைப்படத்தில் நடித்தார்.

சின்னத்திரையில் இவரது முதல் என்ட்ரி 1999ஆம் ஆண்டு ETV தெலுங்கு சேனலில் இடி கத்த காடு என்ற தொடர்தான். தமிழில் சன்டிவியின் செல்வி சீரியல் மூலம் நடிக்க தொடங்கினார். தொடர்ந்து அரசி, செல்லமடி நீ எனக்கு, செல்லமே போன்ற தொடர்களில் நடித்தார். பிறகு விஜய்டிவியின் நினைக்க தெரிந்த மனமே, நீலக்குயில் போன்ற தொடர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ஜீ தமிழின் யாரடி நீ மோகினி, விஜய்டிவியின் தேன்மொழி B.A., , சன்டிவியின் ரோஜா சீரியலில் அருள்வாக்கு அமுதநாயகியாக நடித்துள்ளார். தற்போது சுந்தரி சீரியலில் காந்திமதி கேரக்டர், காற்றுக்கென்ன வேலி படத்தில் வெண்ணிலா பாட்டியாக நடித்து வருகிறார். சுந்தரி சீரியலில் ஜாலியான பாட்டியாக நடித்து வருகிறார். கலைமாமணி உட்பட இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Suntv sundari serial actress gandhimathi pr varalakshmi biography

Next Story
முழுமையாக தடுப்பூசி போட்ட பிறகு கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது?covid 19 vaccinated, covid 19, coronavirus, கொரோனா வைரஸ், கோவிட் 19, இந்தியா, covid 19 india, covid second wave, after fully vaccinated one tests positive
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express