தற்போது சின்னத்திரையில் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வரும் சீரியல் ரோஜா. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அந்த தொடருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் கல்பனா என்கிற கேரக்டரில் நடித்து வருபவர் காயத்ரி சாஸ்திரி. பூர்விகம் கர்நாடகம். ஆனால் பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பையில் தான். இவரது அண்ணன் சஞ்சய் ஒரு திரைப்பட நடிகர். ஒரு நாள் சஞ்சய் பேட்டியை பார்க்க காயத்ரி சென்னைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த இயக்குநர் சுரேஷ் மேனன் காயத்ரியை பார்த்துவிட்டு திரைப்படத்தில் நடிக்க கேட்டுள்ளார். காயத்ரியும் சரி என சொல்ல பின் சுரேஷ் மேனன் இயக்கிய ‘பாசமலர்’ படத்தில் முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிறகு விஜய்-அஜித் இருவரும் இணைந்து நடித்த ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் காயத்ரி நடித்து இருந்தார். தூர்தர்ஷனில் 90-களில் ஒளிபரப்பான ஓம் நம சிவாய தொடரில் பார்வதி தேவியாக நடித்து புகழ் பெற்றார்.
Advertisment
அதற்கு பிறகு ஐந்து மொழி படங்களிலும் பிசியாக நடித்து வந்தார். படங்களில் பிஸியான ஹீரோயினாக நடித்துக்கொண்டிருக்கும்போதே குட்டி பத்மினி இருக்கும் இந்தி சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. அதனை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான ‘குடும்பம், சாவித்திரி, லட்சியம்’ உட்பட பல சீரியலிலும் நடித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் சினிமாவில் கிடைக்காத புகழ் சின்னத்திரையில் கிடைத்தது என காயத்திரி பல பேட்டியில் கூறியுள்ளார். மெட்டி ஒலி சீரியல் பார்க்காத 90's இருக்க முடியாது. திருமுருகன் இயக்கத்தில் மிகப்பெரும் வெற்றி பெற்ற தொடர் அது. இந்த சீரியல் அவரது வாழ்க்கையில் ஒரு டர்னிங் பாயின்ட்டாக அமைந்தது. இந்த தொடரில் சரோஜா என்கிற கேரக்டரில் நடித்திருந்தார். மேலும், அந்த கேரக்டர் மூலம் குடும்ப பெண்களின் வீட்டில் ஒருவராகவே மாறிவிட்டார். இதனைத் தொடர்ந்து தமிழில் ‘மேகலா’, இதனைத் ‘தேவதா’ போன்ற பல சீரியலில் நடித்து வந்தார்.
Advertisment
Advertisements
இப்படி சீரியலில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் போது சின்னத்திரை இயக்குநர் ரவி என்பவரை திருமணம் செய்துகொண்டார். பிறகு ஜீ தமிழ்லில் ‘நெஞ்சை கிள்ளாதே’ சீரியலில் நடித்தார். பிறகு குழந்தை பிறந்ததால் மூன்று வருடம் நடிப்புக்கு முழுக்கு போட்ட அவர் சன்டிவி ரோஜா சீரியலின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். கல்பனா என்கிற கதாபாத்திரத்தில் அர்ஜூனினுக்கு பாசமான அம்மாவாக, ரோஜாவின் அன்பான மாமியாராக, வடிவுக்கரசிக்கு மரியாதை தரும் மருமகளாக நடிப்பில் பட்டய கிளப்பி வருகிறார். இவரை போல் மாமியார் இருந்தால் போதும் குடும்பத்தில் பிரச்சனையே வராது என அனைவரின் மனதிலும் ரீச் ஆகியுள்ளார்.
800 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ரோஜா சீரியலின் வெற்றிக்கு இவரும் முக்கிய காரணம் தான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“