Chithi 2 serial: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நம்பர் 1ஆக கலக்கி வருவது சித்தி 2.சீரியலில் வரும் பல கேரக்டர்களில் நடிகர்கள் மாற்றப்பட்டாலும் ரசிகர்கள் மத்தியில் சீரியலுக்கு மவுசு குறையவில்லை.இவ்வளவு ஏன் சித்தி-2 தொடரின் முக்கிய கேரக்டரான ராதிகாவே சீரியலில் இருந்து விலகியும் டிஆர்பி குறையவில்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். சித்தி 2 சீரியல் என்றாலே கவின்,வெண்பா,யாழினி என்று சொல்லுமளவுக்கு இவர்கள் கேரக்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.தொடக்கத்தில் நவீனை உருகி உருகி காதலித்து வந்த யாழினி இப்போது கதையின் வில்லியாக மாறி மிரட்டுகிறார்.வில்லியான பிறகு யாழினிக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ்.
Advertisment
யாழினி கேரக்டரில் நடிப்பவர் பெயர் தர்ஷனா ஸ்ரீபால். திருச்சியை சேர்ந்த இவர் ஃபேஷன் டிசைனிங் முடித்துள்ளார். ஃபேஷன் டிசைனர் ஆகவேண்டும் என்பதே இவரது கனவு. 4 வருடங்களுக்கு முன்பு ஃபேஷன் டிசைனிங்க்காக சென்னை வந்துள்ளார். இரண்டு வருடங்களாக பல நிறுவனங்களில் வேலை செய்து வந்த இவருக்கு சன்டிவியில் ஸ்டைலிஸ்டாக ஆக பணிபுரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது தான் தர்ஷனாவிடம் ஆதித்யா சேனலில் ஆன்கரிங் செய்ய சொல்லி கேட்டுள்ளனர். மறுக்காமல் முயற்சி செய்யலாம் என நினைத்த தர்ஷனா "சிரித்திடு சீசே" என்ற லைவ் ஷோவில் ஆன்கராக இருந்து வந்துள்ளார். அந்த ஷோவிற்கு நல்ல ரீச் இருந்தது.
Advertisment
Advertisement
பிறகு ஒரு வருடம் கழித்து சித்தி 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. உடனடியாக ஓகே சொல்லி நடிக்க தொடங்கிவிட்டார். யாழினி ஆக்டிங்கை தேர்ந்தெடுத்த பிறகு வீட்டில் ரொம்பவே சப்போர்ட் பன்னாங்களாம். ஆக்டிங்கனா ரொம்ப ஜாலியா சம்பளம் வாங்குறாங்கனு நினைச்சன் ஆனா இங்கா வந்ததான் தெரியுது எவ்ளோ கஷ்டப்பட்டு நடிக்கிறாங்கனு என கூறும் தர்ஷனாவுக்கு நடிகை ராதிகா சரத்குமார் தான் ரோல் மாடல். அவரை போல் வாழ்க்கையில் தனித்துவமா இருக்கனும் தான் ஆசையாம்.
ஷூட்டிங் செட்டில் ராதிகாவை பார்த்து தர்ஷனா ரொம்ப அப்சர்வ் செய்து நடிப்பாங்களாம். எப்போதும் யூடியூபில் சென்று தன்னுடைய சீரியல் வீடியோக்களுக்கு வரும் கமெண்ட்ஸ் அனைத்தையும் படித்து பார்ப்பாங்களாம். பாசிட்டிவ் நெகட்டிவ் எந்த கமெண்ட்ஸ் வந்தாலும் எதையும் பர்ஸனலாக எடுத்துக்கமாட்டாங்களாம். இதனால்தான் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.தர்ஷானாவுக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய்தானாம். விஜய் படம் திரைக்கு வந்தால் பஸ்ர்ட் டே பஸ்ர்ட் ஷோ தவறாமல் பார்த்துவிடுவாராம்.
வழக்கமான நடிகைகள் போல் எப்போதும் சமூக வலைதளங்களில் போட்டோக்களை போட்டு வைரலாக்கல்காமல் எப்போதாவது இரண்டு புகைப்படத்தை பதிவிடுவதோடு சரி . ஆனால் அதையும் அவரது ரசிகர்கள் வைரலாக்கி விடுகின்றனர். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம்தான் .சான்ஸ் கிடைச்சா நடிப்பதற்கு தயாராக உள்ளார். .கலாட்டா உமேன் ஐக்கான் 2021 க்கான " Favorite serial villi" விருது வாங்கியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” ( https://t.me/ietamil )