சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் திருமகள். இந்த தொடரின் நாயகியாக நடித்து வருபவர் அஞ்சலி.இவரது நிஜப் பெயர் ஹரிகா சாடு. ஆந்திராவை சேர்ந்தவர். இன்ஜினியரிங் படித்துள்ள இவருக்கு நடிப்பு மீது ஆர்வம் அதிகம். சினிமா பின்புலம் இல்லாததால் தன்னுடைய நடிப்பு திறமையை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வந்தார். டிக்டாக், டப்ஸ்மாஷ்களில் என ஹரிகா பதிவிடும் வீடியோக்களுக்கு நிறைய ஃபாலோவர்ஸ் இருந்தனர். இதன் மூலம் தெலுங்கு சின்னத்திரைக்குள் நுழைந்தார்.
2019ஆம் ஆண்டு ஜெமினி டிவியில் ஒளிபரப்பான கல்யாணி என்ற தொடரில் அறிமுகமானார். காதலை மையப்படுத்திய கதை என்பதால் இளைஞர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. ஹரிகாவிற்கு இந்த சீரியல் மூலம் ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ். பிறகு தமிழ் சின்னத்திரைக்குள் நுழைந்தார். 2020ஆம் ஆண்டு ஆதித்ய இயக்கத்தில் சன்டிவியின் திருமகள் தொடர் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். இந்த தொடர் தெலங்கு சீரியல் Atho Athamma Kuthuro தொடரின் ரீமேக் ஆகும். இந்த தொடரில் சுரேந்தர் ஷண்முகத்துடன் இணைந்து அஞ்சலி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.
சீரியல் முதல் சினிமா வரை அனைத்து ஹீரோயின்களும் மார்டனாக இருக்கும் காலத்தில், நம் நாட்டு கலாச்சாரம் மாறாத பெண்ணாக பாவாடை தாவணி உடுத்தி வந்து எல்லோர் மனதிலும் பளிச்சென அமர்ந்து விட்டார் அஞ்சலி. இந்த தொடரில் மிகவும் தைரியமான பெண்ணாக வலம் வருக்கிறார். தற்போது 200 எபிசோடுகளை கடந்து பல திருப்புமுனைகளுடன் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது திருமகள் சீரியல்.
தாய் மொழியான தெலுங்கில் இவருக்குப் பல ரசிகர்கள் உள்ளனர். தற்போது திருமகள் தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களும் அதிகரித்து உள்ளனர். ஹரிகாவிற்கு தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசையாம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிடுவது, ஷூட்டிங் ஸ்பாட் அட்ராசிட்டிஸ் போன்றவற்றை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil