ஆபிஸ் சீரியல் அறிமுகம்.. சின்னத்திரையில் ஃபேமஸ் வில்லி.. வானத்தைப்போல பொன்னி லைஃப் ட்ராவல்!

விஜய் டிவியின் ஆபிஸ் தொடரில் மணிமேகலை என்ற எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரையில் பிரபலமானார் பிரீத்திகுமார்.

preethikumar

வானத்தைப்போல சீரியலில் பொன்னி கேரக்டரில் நடித்து வருபவர் பீரித்தி குமார். பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். எத்திராஜ் கல்லூரியில் விஸ்காம் படித்துவிட்டு முன்னணி டிவி சேனலில் ஆன்கரிங் செய்து வந்தார். அப்போதுதான் சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 2013ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் நடித்தார். அந்த தொடரில் மணிமேகலை என்ற கேரக்டரில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார்.

அறிமுகமான முதல் தொடரே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. ஏராளமான சீரியலில் எதிர்மறையான கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடித்து ஃபேமஸ் ஆனார். தொடர்ந்து ஆண்டாள் அழகர், லட்சுமி வந்தாச்சு, தெய்வம் தந்த வீடு, பிரியமானவள், வள்ளி, சந்திரலேகா, லஷ்மி கல்யாணம், நெஞ்சம் மறப்பதில்லை, தமிழ் செல்வி போன்ற பல சீரியல்களில் நடித்து பாப்புலரானார். கேளடி கண்மணி தொடரில் வைஷூ கதாபாத்திரமும், பிரியமானவள் தொடரில் நந்தினி கதாபாத்திரமும் ரசிகர்களிடையே ரொம்பவே ரீச் ஆனது.

ஆபிஸ் தொடரில் தொடங்கிய அவரது சீரியல் பயணம் எதிர்மறையான கேரக்டர்களிலே தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டி வருகிறார். மலையாள மொழி சீரியலிலும் நடித்துள்ளார். சுந்தரன் நீயும் சுந்தரி நீயும் தொடரிலும் நடித்துள்ளார். தற்போது லேட்டஸ்டாக சன்டிவியின் வானத்தை போல தொடரில் பொன்னி கேரக்டரில் நடித்து வருகிறார். இதுவரை இவர் நடித்த ரோல்களிலே இந்த தொடரில்தான் பாசிட்டிவ், காதல், குடும்பம் போன்ற காட்சிகளில் நடிக்கிறார்.

சின்னத்திரையில் இவரும் நடிகை சஹானாவும் நெருங்கிய தோழிகள். ஸ்கூல் படிக்கும்போது இவர் ஒரு கோகோ பிளேயர். ஏராளமான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவ் ஆனவர். இன்ஸ்டாகிராமில் ஷூட்டிங் ஸ்பாட் அட்ராசிட்டிஸ், ரீல்ஸ், ஃபோட்டோஷூட் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். விஜய் டிவி, சன்டிவி, ஜி தமிழ் போன்ற சேனல்களில் இதுவரை 20க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரையில் சான்ஸ் கிடைத்தால் நடிக்க ஆர்வமாக உள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Suntv vanathai pola ponni actress preethikumar biography

Next Story
பருக்கள் போய்விடும் ஆனால் சருமம் சேதமாகும் – ஜனனி அசோக் பியூட்டி ஹாக்ஸ்Serial Actress Janani Ashok Beauty Hacks Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com