சின்னத்திரையில் கிட்டதட்ட 21 வருடங்களாக நடித்து வருபவர் சாதனா. 1980's 1990's ல் முக்கிய கதாநாயகி. ஆந்திராவை சேர்ந்த இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். முதன் முதலில் 'நிங்களில் ஒரு ஸ்திரி' என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு நமுகு பார்கன் முந்திரி தோப்புக்குள் என்ற படத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்து பிரபலமாக அறியப்பட்டார். தொடர்ந்து தீர்த்தம், சீசன், ஜீவிதம் ஒரு ராகம், சாக்லேட், சுல்தான், நாவல், டாக்டர் லவ் போன்ற 100க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்தார். மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தவர்.
Advertisment
1982ல் இட்லர் உமாநாத் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகளாக நடித்தார். தொடர்ந்து நெஞ்சத்தை அள்ளித்தா படத்தில் ஹீரோயினாக நடித்தார். பின்பு உன்னை தேடி வருவேன், நானும் ஒரு தொழிலாளி, ராஜ மரியாதை, என்ன பெத்த ராசா, மைடியர் லிசா, மனைவி ஒரு மாணிக்கம், வீரமணி, சிநேகிதியே, லவ் சேனல், புதிய கீதை, ஒரு பொண்ணு ஒரு பையன், தொட்டி ஜெயா, என்னமோ ஏதோ என 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
தெலுங்கு, கன்னட மொழிகளிலும் 10 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். நான்கு மொழிகளிலும் 170க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். 1986ல் நாமுக்கு பார்கன் முந்திரி தோப்புகள் படத்தில் நடித்தற்காக கேரள மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருது பெற்றார். அதே படத்திற்காக பிலிம் ஃபேர் விருதும் வழங்கப்பட்டது. சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தபோதே குமார் என்ற தொழிலதிபரை மணந்து நடிப்பிலிருந்து சிறிது காலம் விலகினார். அதன்பின்னர் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்தார். லேட்டஸ்டாக 2021ல் மலையாளத்தில் ஆக்வாரியம் படத்தில் நடித்திருந்தார்.
சின்னத்திரைக்குள் நுழைந்த இவர் ஏசியாநெட், டிடி மலையாளம், சூர்யா டிவியில் சில சீரியல் தொடர்களில் நடித்தார். அதன்பிறகு தமிழில் அர்த்தமுள்ள உறவுகள் மூலம் என்ட்ரி ஆனார். பின்னர் சன்டிவியில் 2000ஆம் ஆண்டு கோபுரம், பணம், நம்பிக்கை, பெண், அவர்கள், சொர்கம், வேப்பிலைக்காரி, நாணயம் போன்ற பல தொடர்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். கலைஞர் டிவியில் லட்சியம், ரேகா ஐபிஎஸ், தினம் தினம் தீபாவளி சீரியல்களில் நடித்து பிரபலமானார். தென்றல் சீரியல் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பயங்கர வில்லத்தனமாக நடித்திருந்தார். வள்ளி, கல்யாணபரிசு தொடரிலும் நடித்துள்ளார். கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் பிரியா பவானி சங்கரின் அம்மாவாக நடித்து நல்ல ரீச் ஆனார். பின்னர் சின்னத்தம்பி சீரியலில் நந்தினியின் அம்மா, நிலா சீரியல், அன்புடன் குஷி சீரியல்களில் நடித்து பாதியில் விலகினார்.
மலையாள உலகில் இவரது பெயர் ஷாரி. முறைப்படி பரதநாட்டியம் கற்றுள்ளார். இவர் சீரியலில் போடும் காஸ்டியூம் எல்லாம் அவருடைய மகள்தான் செலக்ட் பண்ணுவாராம். ஒரே மாதிரியான கேரக்டரில் நடித்தால் போர் அடித்துவிடும் என்பதால் பாசமான அம்மாவாகவும், வில்லியாகவும் கலக்கி வருகிறார். இவருக்கு சமைப்பது ரொம்பவே பிடிக்குமாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil