கத்திரிக்காய் தக்காளி கடையல் ஒரு முறை இப்படி செய்து பாருங்க. செம்ம ருசியா இருக்கும்.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணை 2 டேபிள் ஸ்பூன்
2 பெரிய வெங்காயம் நறுக்கியது
பூண்டு 8
1 கொத்து கருவேப்பிலை
கால் கிலோ கத்திரிக்காய்
சின்ன வெங்காயம் 15
8 பல் பூண்டு
உப்பு தேவையான அளவு
2 பச்சை மிளகாய்
கொஞ்சம் கொத்தமல்லி
கொஞ்சம் கருவேப்பிலை
சின்ன அளவு புளி
1 டீஸ்பூன் மிளகாய் தூள்
1 டீஸ்பூன் மல்லித் தூள்
தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயத் தூள், கருவேப்பிலை.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, அதில் வெங்காயம் நறுக்கியதை சேர்க்கவும். தொடர்ந்து வதக்கவும். நிறம் மாறியதும், கருவேப்பிலை, பச்சை மிளகாய், தக்காளி நறுக்கியதை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும், அதில் மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். தொடர்ந்து இதை மிக்ஸியில் அரைத்துகொள்ளவும். அதிகமாக அரைக்க வேண்டாம். தொடர்ந்து இதில் எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்து கிளரவும். சூப்பரான கத்திரிக்காய் தக்காளி கடையல் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“