/tamil-ie/media/media_files/uploads/2021/02/New-Project-10.jpg)
super singer Abhilash instagram super singer 8 Abhilash
super singer Abhilash instagram super singer 8 Abhilash : சூப்பர் சிங்கர் 8 சீசன் மூலம் பிரபலமான பிரபலமான அபிலாஷிற்கு திருமணம் முடிந்தது.சமீபத்தில் அதே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு வருகை புரிந்த வந்த மானசாவை கரம் பிடித்தார்.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரமாண்ட ஷோக்களில் ஒன்று தான் சூப்பர் சிங்கர்.பல சீசன்களாக நடந்து வரும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பலர் பிரபலமடைந்ததுள்ளனர் .அந்த வகையில் தற்போது நடந்து வரும் சூப்பர் சிங்கர் 8-வது சீசனில் போட்டியாளராக இருந்து வருபவர் அபிலாஷ் .
இவருக்கு பெண்கள் மத்தியில் மவுசு அதிகம். தனியாக யூடியூப் சேனலை ஆரம்பித்து அதன் வழியாகவும் இசை, பாடல் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். இவருக்கு தனியாக ஃபலோவர்கஸ்களும் இருக்கின்றனர். இந்நிலையில், போன வாரம் டெலிகாஸ்ட் ஆன சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் முதன்முதலாக தனது வருங்கால மனைவியை அபிலாஷ் அறிமுகப்படுத்தி இருந்தார். அவருக்கு க்யூட்டாக ப்ரப்போஸ் கூட செய்தார்.
ஆம், அந்த மானசா கூட தான் அபிலாஷ்-க்கு திருமணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. தனது பாடல்கள் மூலம் அனைவரது மனதையும் கொள்ளையடித்த இவருக்கு தற்போது திருமணம் நிறைவடைந்துள்ளது .இந்த திருமண நிகழ்வில் சூப்பர் சிங்கர் போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2021/02/22222.jpeg)
இசை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை இந்த ஜோடிகளுக்கு கூறி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us