14 கோடி, பலாப்பழம், ஷூட்டிங் ஸ்பாட் – சூப்பர் சிங்கர் பிரியங்கா யூடியூப் சேனல் ஸ்பெஷாலிட்டி!

Super Singer Anchor Priyanka Deshmukh Youtube Tamil பூண்டு, சிவப்பு மிளகாய், மல்லி மற்றும் உப்பு சேர்த்து அரைக்கும் இந்த சட்னி உண்மையில் பலரின் ஃபேவரைட் லிஸ்டில் இருக்கும்.

Super Singer Anchor Priyanka Deshmukh Youtube Tamil
Super Singer Anchor Priyanka Deshmukh Youtube Tamil

Super Singer Anchor Priyanka Deshmukh Youtube Tamil : நிகழ்ச்சி தொகுப்பதில் பல்வேறு விதமான நகைச்சுவை கன்டென்ட்டுகளையும் புகுத்தி, சுவாரசியமாகத் தொகுத்து வழங்குவதில் கில்லாடி பிரியங்கா தேஷ்பாண்டே. எப்போதுமே எனர்ஜி லெவல் குறையாத இவர், தனக்கென யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் ஏராளமான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். பெரும்பாலும் Vlog கன்டென்ட்டுகளே அதிகம் என்றாலும், அவை எப்போதுமே ட்ரெண்டிங்கில் வந்துவிடும். அந்த வரிசையில் சமீபத்தில் அவர் அப்லோட் செய்த ஒரு வீடியோ 7 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை பெற்று ட்ரெண்டிங்கில் உள்ளது.

மருத்துவமனை விசிட், பலாப்பழம் ஸ்பெஷல், ரெசிபி ஸ்பெஷல், ஷூட்டிங் ஸ்பாட் விசிட் என நான்கு வித்தியாச காணொளிகளை இணைத்து ஒரே வீடியோவாக பதிவேற்றியிருக்கிறார். ஜூலை 1-ம் தேதி மருத்துவர் தினத்தை முன்னிட்டு, தனியார் மருத்துவமனைக்கு சிரிப்பு மருத்துவராகக் களமிறங்கியிருந்தார் பிரியங்கா. மார்பக புற்றுநோய்க்கான ஓர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்திற்காக மருத்துவமனைக்குச் சென்று அங்கு இருக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு ஊக்கமளித்தார்.

அங்கு, ப்ரியங்காவுடன் மிஸ் இந்தியா 2018 அனுகிரிதி வாஸ் இருந்தார். கல்லீரல் சர்ஜரி செய்வதற்கென்று 14 கோடி மதிப்புள்ள லேட்டஸ்ட் தொழில்நுட்ப உபகரணங்களைக் காட்டினார்கள். மேலும், அந்த மருத்துவமனையில் இருக்கும் மற்ற வசதிகள் அனைத்தையும் காண்பித்து, மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அவர்களோடு செல்ஃபி எடுத்துக்கொண்டு கிளம்பினார் பிரியங்கா. பிறகு பெரிய முழு பலாப்பழத்தைப் பிரித்து, தனி ஆளாக சாப்பிட்டு, அதற்கு ஒரு சின்ன ஃபிளாஷ்பேக் வேறு கூறினார்.

இவருடைய காணொளிகளில் மிகப் பெரிய ப்ளஸ், முக பாவனைகளுக்கு ஏற்ற கவுன்ட்டர்கள்தான். யாரையும் விட்டுவைப்பதாக இல்லை. தன் தாயை இன்ஸ்டன்ட் சட்னி ஒன்றை தயார் செய்ய சொல்லி நம்மோடு பகிர்ந்துகொண்டார். வெறும் பூண்டு, சிவப்பு மிளகாய், மல்லி மற்றும் உப்பு சேர்த்து அரைக்கும் இந்த சட்னி உண்மையில் பலரின் ஃபேவரைட் லிஸ்டில் இருக்கும்.

பிறகு ஒன்றரை மாதம் கழித்து தன் ஷூட்டிங் ஸ்பாட்டை சுற்றிக்காட்டினார். அங்கேயும் ராகி சேமியாவில் பால் மற்றும் சர்க்கரை கலந்து சாப்பிடுவதைத்தான் நீண்ட நேரம் காண்பித்தார். பக்காவாக மேக்-அப் செய்து வழக்கம்போல தன்னுடைய அட்ராசிட்டிகளை ஆரம்பித்தார். இறுதியாக, “எப்போ பார்த்தாலும் ஜாலியா இருப்பதனால், எங்கள் வாழ்க்கையில் சோகமே இல்லையா என்று கேட்பவர்கள் ஏராளாம். ஆனால், அப்படி அல்ல. எவ்வளவு சோகம் இருந்தாலும், கேமரா முன்பு எல்லாவற்றையும் மறந்து வேலையை ஃபோக்கஸ் செய்வது கடினமான ஒன்று” என தன்னுடைய வேலையை பற்றி சிறிது பகிர்ந்துகொண்டு காணொளியையே நிறைவு செய்தார் பிரியங்கா.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Super singer anchor priyanka deshmukh youtube tamil

Next Story
‘மக்களுடன் பிணைப்பை ஏற்படுத்த எனது லென்ஸைப் பயன்படுத்துவேன்’ – பிரியங்கா காந்தியின் மகன் ரைஹான்I will use my lens to connect with people says Priyanka Gandhi’s son Raihan
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com