Super Singer Anchor Priyanka Wardrobe and Room Tour Tamil News
Super Singer Anchor Priyanka Wardrobe and Room Tour Tamil News : பிரபலங்கள் பலரும் ஹோம் டூரில் மில்லியன் வியூஸ்களை அள்ளிக்கொண்டிருக்க, தன்னுடைய அறையை மட்டுமே காண்பித்து 3 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை பெற்றிருக்கிறார் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா. அப்படி என்னவெல்லாம் இருக்கிறது அவருடைய ரூமில்? பார்ப்போம்!
Advertisment
தனியார் நிறுவனம் அனுப்பிய புத்தம் புது மேட்ரஸ்ஸை அன்றுதான் முதல்முதலில் தன் கட்டிலில் விரித்தார். புதிய மெத்தையில், சிறுகுழந்தைபோல் அங்கும் இங்கும் உருண்டு பிரண்டு ஒரு வழி செய்துவிட்டார். அதனைத் தொடர்ந்து, தானே பார்த்துப் பார்த்து ரசித்து ரசித்து செதுக்கிய தன் இணை அலங்கார பொருள்களுக்கான அலமாரியை தூசி தட்டினார்.
Advertisment
Advertisements
அதில் விதவிதமான டாங்க்ளர் காதணிகள், பெரிய நெக்லஸ், வளையல்கள் என ஷூட்டிங்கின்போது உபயோகிக்கும் அத்தனை அலங்கார பொருள்களும் இருந்தன. அதில் பின்னணி பாடகி சித்ரா அம்மா கொடுத்த கலெக்ஷன் மற்றும் தன் நண்பர்கள் கொடுத்த பொருள்களும் இருந்தன.
பிறகு, தன்னுடைய 4 நான்கு வயதிலிருந்து அவர் சேகரித்து வைத்த கியூட் பொருள்களைக் காட்டினார். அறையின் ஒரு ஓரத்தில் இருக்கும் திரையை விளக்கி, அங்கிருந்த ஜன்னலில் மாட்டப்பட்டிருக்கும் அந்தப் பொருள்களில் பாதி, ஆங்கிரி பேர்ட்ஸ் பொம்மைகள்தான். அது, அவரிடம் இருந்த ஆங்கிரி பேர்ட்ஸ் டீ-ஷர்ட் மற்றும் பெரிய பொம்மைகள் கலெக்ஷனிலும் பிரதிபலித்தது.
அவரோட 29 வருடமாகப் பயணிக்கும் ஒரு ஸ்பெஷல் டெடி பியரும் அந்த அறையிலிருந்தது. அதுவே தன்னுடைய மிகப் பெரிய சொத்து என்றும் தனக்குப் பின் வரும் சந்ததியினருக்கு அதனை விட்டுச் செல்வதாகவும் பாகுபலி ஸ்டைலில் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார். அதுமட்டுமா, படுக்க வைத்தால் கண்களை மூடும் மற்றும் நிமிர வைத்தால் கண்களைத் திறக்கும், 90'ஸ் கிட்ஸ்களின் பார்பி பொம்மையையும் இன்றுவரை பாதுகாத்து வைத்திருக்கிறார்.
ஏராளமான விதவிதமான ஆடைகளைப் பார்க்கலாம் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அவர் ஷோக்களில் உடுத்தும் உடைகள் அனைத்தும் ஸ்பான்ஸர்கள் கொடுப்பதுதான். அதையும் வாங்கிவிடுவார்களாம். ஆகமொத்தத்தில் பிரியங்கா அறை முழுக்க வெறும் பொம்மைகள் மட்டுமே இருந்தன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil