மன்னார் குடி பொண்ணு.. மிமிக்ரி ராணி.. சூப்பர் சிங்கர் அனு பற்றிய ரீவைண்ட்!

எல்லோரையும் கலாய்ச்சி அவங்களை மாதிரி மிமிக்ரி பண்ணி கைத்தட்டல்களையும் அள்ளி இருக்கிறார்

By: Updated: February 20, 2021, 02:34:27 PM

super singer anu age vijaytv super singer anu anand : விஜய் டிவியின் `சூப்பர் சிங்கர் ஜூனியர்’ நிகழ்ச்சி பற்றிய அறிமுகமே வேண்டாம்.

இதில் வந்தவர்கள் என்றுமே மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விடுகின்றனர். கோலிவுட்டிலும் கலக்கி வருகின்றனர். அந்த வகையில், பல ரசிகர்களின் மனத்தில் இடம்பிடித்தவர் அனு. `பண்ணையாரும் பத்மினியும்’ படத்தின் `உனக்காகப் பொறந்தேனே எனதழகா..!’ பாடலைப் பாடியவர். இப்போது சூப்பர் சிங்கர் 8 சீசனிலும் கலக்க வந்து இருக்கிறார்.

இவரின் சொந்த ஊர் மன்னார்குடி. ஆனால், அம்மா, அப்பா கேரளா. ப்ளஸ் டூ முடிச்சுட்டு, எலக்ட்ரானிக் மீடியா பாடப் பிரிவை செலக்ட் பன்ணி படித்து வருகிறார். அனுக்கு அக்கா இருக்காங்க. அவங்க ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறாங்க. அனுக்கு யாழினி மற்றும் ஆஜித் ரொம்ப குளோஸ். இப்போ வரை டச்ல இருக்கோம். இவர்கள் மூணு பேரும் சேர்ந்தால், அந்த இடம் பயங்கர ரகளையா இருக்கும்.”

அனு சூப்பரா மிமிக்ரியும் செய்வாராம். கொஞ்சம் மத்தவங்களை அவங்க ஹர்ட் ஆகாத அளவுக்குக் கலாய்ப்பாராம். ஒருநாள் சூப்பர் சிங்கர் பிராக்டீஸ்ல எல்லோரையும் கலாய்ச்சி அவங்களை மாதிரி மிமிக்ரி பண்ணி கைத்தட்டல்களையும் அள்ளி இருக்கிறார். அப்போதிலிருந்து மிமிக்ரி ராணி பட்டப் பெயரை வெச்சுட்டாங்க.”

அனுக்கு ம.கா.பா.ஆனந்த் மூலம் நடிப்பு வாய்ப்பு கிடைச்சது. அவர் நடிக்கும் `மாணிக்’ படத்தில் ஸ்கூல் பொண்ணு மாதிரி நடிச்சிருந்தார். அப்ப சிங்கர் அனு இனி நடிகை அனு போல.

அனுவின் மிகப்பெரிய பலமே அவரின் தந்தை தானாம். . பிராக்டீஸ் முடியுற வரைக்கும் எவ்வளவு நேரமானாலும் வெயிட் பண்ணுவாராம். அனு எந்த ஊருக்குப் பாடப் போனாலும் கூடவே வருவாராம். அம்மா ஸ்டிரிக்ட் ஆபீஸர். அனு பாட ஆரம்பிச்சாலே, தப்புகளை உன்னிப்பா கவனிச்சு சுட்டிக்காட்டுவாங்களாம். குடும்பமே இசைக்குடும்பம் போல.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Super singer anu age vijaytv super singer anu anand supersinger anu anand instagram anu aajeedh

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X