/tamil-ie/media/media_files/uploads/2019/12/a609.jpg)
super singer diwakar marriage vijay tv hot star - சூப்பர் சிங்கர் வின்னர் திவாகருக்கு திருமணம் - மணப்பெண் யார் தெரியுமா?
சூப்பர் சிங்கர் திவாகர் என்றால், விஜய் டிவி வெறியர்களுக்கு நன்றாகவே தெரியும். சூப்பர் சிங்கர் நான்காவது சீசனின் வெற்றியாளர் இவர் தான். பழைய 'பலே பாண்டியா' படத்தின் "நீயே உனக்கு என்றும்" என்ற பாடலை இறுதிப் போட்டியில் பாடி டைட்டிலை வென்று அசத்தினார்.
தவிர, அந்த சீசனில் அதிக பார்வையாளர்களின் ஓட்டு இவருக்கு தான் கிடைத்தது. இவரது அந்த பாடலை நேரில் ரசித்த ஜானகி, ஆனந்த கண்ணீர் வடித்து, மேடையேறி வந்து அவரது நெற்றியில் முத்தமிட்டார்.
சாதாரண குடும்ப பின்ணணியில் இருந்து வந்த இவர் கடுமையான உழைப்பால் தன் திறமையை வெளிப்படுத்தினார். தற்போது சினிமாவில் பல படங்களின் பின்னணி பாடகராக பாடல்களை பாடி வருகிறார்.
இந்நிலையில், திவாகருக்கு இன்று திருமணம் நடைபெற்றது
இந்த நிகழ்விற்கு இசைமைப்பாளர் இமான் தலைமை தாங்கினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us