super singer malavika sundar : எவ்ளோவோ விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் இருந்தாலும் சூப்பர் சிங்கர் அளவுக்கு எதுவும் சோபிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு தாறுமாறு ஹிட்டு அடித்தது. குடும்பம், குழந்தைகள், இளைஞர்கள், அடுத்த அம்மாவாசைக்குள் சொர்கத்துக்கு செல்லப்போகும் பெருசுகள் வரை எல்லாம் அந்த நிகழ்ச்சியின்போது ஒன்றுகூடி சூப்பர்சிங்கரை பார்ப்பார்கள்.
Advertisment
அப்படிப்பட்ட பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான மாளவிகா சுந்தர் தற்போது பல நாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் பாட்டு பாடும் விடியோவும், அவரின் சில போட்டோக்களும் அவ்வப்போது பதிவு செய்வார்.
வெல்வெட் நகரம் படத்தில் பாடகி மாளவிகா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். வெல்வெட் நகரம் பார்த்த பலரும் படத்தை பற்றிய பல விசயங்களை பகிரும் போது மாளவிகாவின் கதாபாத்திரம் பற்றியும் மாளவிகாவின் நடிப்பு பற்றியும் புகழ்ந்து பேசினார்கள். மாளவிகா இந்த படத்தில் மிக முக்கிய மற்றும் கதையின் திருப்புமுனை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.
மாளவிகா தென்னிந்திய மொழிகளில் சிறந்த பாடகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் சூப்பர் சிங்கரில் பாட்டு பாடி கொண்டிருக்கும் போது தமிழக ரசிகர்களின் பேராதரவு இருந்தது. தற்போது நடிகையாகவும் சிறந்த நடிப்பை கொடுத்து இருப்பதால் தமிழில் இவருக்கு அதிக வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news