வேப்பிலை, சீயக்காய் தரும் அழகு: சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ லைஃப்ஸ்டைல்

Super Singer Nithyashree Beauty Tips அந்தத் தண்ணீரில் தினமும் காலை முகம் கழுவலாம். இது நிச்சயம் முகத்தில் பொலிவை உருவாக்கும்.

Super Singer Nithyashree Beauty Tips Tamil News : சிறுவயது முதல் இசைத்துறையில் ஜொலித்துக்கொண்டிருக்கும் நித்யஸ்ரீ, சமீபத்தில் பல மேஷ் அப் பாடல்களைக் கொடுத்து ட்ரெண்டானார். நீண்ட கூந்தல், பளபளக்கும் சருமம் என இவருடைய நேர்த்தியான மேக்-அப்பை கண்டு வியக்காதவர்களே இல்லை. எப்படிதான் இவ்வளவு பெரிய கூந்தல் அதுவும் அடர்த்தியாக வளர்கிறது? அதன் ரகசியம் என்ன? என்று பலரும் இவருடைய யூடியூப் பக்கத்தில் கேட்பதுண்டு. அதற்கான விடையை சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் நித்யஸ்ரீ.

Super Singer Nithyashree Beauty Tips Neem Coconut Oil Tamil News
Super Singer Nithyashree Beauty Tips

ஏராளமான ரசாயனம் கலந்தாய் பொருள்களை உபயோகித்து, சலித்த பிறகு நித்யஸ்ரீயின் முதன்மை மற்றும் இறுதி தேர்வாக இருப்பது இயற்கைப் பொருள்கள்தான். ஆனால், இயற்கைப் பொருள்கள் உபயோகித்தால் அதனை தினமும் பயன்படுத்தவேண்டும். அவ்வப்போது பயன்படுத்துவதால் எந்தப் பயனும் இல்லை என்கிற குறிப்போடு முகப்பொலிவுக்கான டிப்ஸை பகிர்ந்தார்.

Super Singer Nithyashree Beauty Tips Neem Coconut Oil Tamil News
Super Singer Nithyashree

“பளபளக்கும் சருமத்திற்கு ஃப்ரெஷ் உருளைக்கிழங்கை அரைத்து முகத்தில் தடவி, அது காய்ந்ததும் கழுவலாம். அப்படி இல்லையென்றால், சூடான தண்ணீரில் சிறிதளவு வேப்பிலையை சேர்த்து, அதன் ஜூஸ் நன்கு இறங்கியதும், அந்தத் தண்ணீரில் தினமும் காலை முகம் கழுவலாம். இது நிச்சயம் முகத்தில் பொலிவை உருவாக்கும்.

 

View this post on Instagram

 

A post shared by Nithyashree (@_nithyashree)


கூந்தலைப் பொறுத்தவரை, அது என்னுடைய மரபணுதான் காரணம். எனக் கொள்ளுப்பாட்டி, பாட்டி, அம்மானு எல்லோருக்கும் நீண்ட கருமையான கூந்தல் இருந்தது. எனக்கும் அப்படிதான் இருந்தது. அதற்காக எதுவும் ஸ்பெஷலாக செய்யவில்லை. சாதாரண தேங்காய் எண்ணெய் தடவி சீயக்காய் தேய்த்துக் குளிப்பேன். அவ்வளவுதான் நான் கூண்டுகளுக்கா செய்வது. ஆனால், தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு, முடியின் அடிப்பகுதி வரை இருக்கமாகக் கூந்தலைப் பின்னிக்கொண்டுதான் உறங்கச் செல்வேன். இப்படிச் செய்தால் கூந்தல் நீளமாகவும் அடர்த்தியாகவும் வேகமாகவும் வளரும்” என்கிற டிப்ஸோடு நிறைவு செய்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Web Title: Super singer nithyashree beauty tips neem coconut oil tamil news

Next Story
இம்யூனிட்டிக்கு இதுதான் பெஸ்ட்: சோளம், முருங்கை இலை பயன்படுத்துவது எப்படி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express