Super Singer Nithyashree Youtube Channel Specials Tamil News
Super Singer Nithyashree Youtube Channel Specials Tamil News : பிரபலங்கள் பலரும் தங்களுக்கென்று தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஆரம்பித்திருந்தாலும், அதில் பெரும்பாலான கன்டென்ட்டுகள் ஹோம் டூர், Vlog போன்றவையாகத்தான் இருக்கும். ஆனால், தன் தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்தி, மில்லியன் கணக்கான ரசிகர்களைப் பெற்றிருக்கிறார் சூப்பர் சிங்கர் புகழ் நித்யஸ்ரீ.
Advertisment
சூப்பர் சிங்கரில் ஆரம்பமான நித்யஸ்ரீயின் பயணம் வட இந்தியா வரையிலான பல போட்டிகளில் பங்குபெற்று, வெற்றிபெறும் இருக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என ஏராளமான மொழிகளிலும் பிசிரில்லாமல் பாடுபவர். இரண்டு மூன்று வெவ்வேறு மொழிகளில் இருக்கும் பாடல்களை ஒன்றாக இணைத்து, புதுவிதமான ஃபியூஷன் மிக்ஸ் செய்வதில் இவர் கில்லாடி.
அந்த வரிசையில், ரசிகர்கள் தேர்வு செய்த பல்வேறு மொழிகளில் சில பாடல்களை எடுத்து, அதனை ஒன்றாக இணைந்து, காரில் சென்றபடியே நித்யா பாடிச்செல்லும் இந்த குறிப்பிட்ட காணொளி, ஒன்றல்ல இரண்டல்ல 76 மில்லியன் வியூஸ்கள் பெற்றிருக்கின்றன. இதில், தமிழின் 'கதைப்போமா; பாடல் முதல் மலையாளத்தின் பவிழ மழையே பாடல் வரை பல இனிமையான பாடல்கள் உள்ளன.
அதேபோல, தெலுங்கு மொழியில் செம்ம ஹிட் அடித்த 'சாமஜவரகமனா' எனும் பாடலை வித்தியாச முறையில் ஒளிப்பதிவு செய்திருந்தார். இது 5 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை பெற்றிருக்கிறது. இதுபோல பல்வேறு வகையான பாடல்களை, குறிப்பாக மக்களுக்குப் பிடித்த பாடல்களைப் பாடி பதிவு செய்து வருகிறார்.
பாட்டு மட்டுமா? கூடவே டான்ஸ் கவர் வீடியோவையும் பதிவு செய்து அப்லோட் செய்திருக்கிறார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் வரும், வாத்தி கமிங் பாடலுக்கு நடனம் ஆடி பதிவு செய்திருந்த காணொளி, 2 மில்லியனுக்கு அதிகமான வியூஸ்களை பெற்றது. இந்தப் பாடலின் பதிவின்போது, எதிர்பாராத விதமாக நித்யா கீழே விழுந்து அடிபட்டதெல்லாம் வேறு கதை.
மற்றவர்களைப்போல் இருக்காது இவருடைய Vlogs வீடியோக்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படியெல்லாம் பாடலை உருவாக்குகின்றனர் என்பதைப் படம்பிடித்து, அதனை Vlog வீடியோவாக வெளியிடுகிறார். அதுவும் லட்சக்கணக்கான வியூஸ்களை பெறுகின்றன. இது பார்ப்பதற்கு வித்தியாசமாகவும், கலகலப்பாகவும் இருக்கிறது. பாடல் பாடுவது மட்டுமில்லாமல், அதற்கேற்ற உடை, மேக்-அப் என்ன எல்லாமே பக்காவாக இருப்பதாலேயே இவருக்கு ஏராளமான வியூஸ் குவிகின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil