/tamil-ie/media/media_files/uploads/2021/04/Nithyashree.jpg)
Super Singer Nithyashree Youtube Channel Tamil News
Super Singer Nithyashree Youtube Channel Tamil News : 'சூப்பர் சிங்கர்' ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்குபெற்று, தன் இனிமையான குரலால் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நித்யஸ்ரீ. தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளிலும் பாட்டுப் பாடுவதில் கில்லாடி இவர். சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஆரம்பித்தவருக்கு தற்போது 1 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2021/04/Ns3.png)
பாடகியாச்சே, வெறும் பாடல்கள் வீடியோக்கள் மட்டும்தான் இருக்கும் என்று நினைத்தால், அதுதான் தவறு. பாடல்கள் மட்டுமல்ல, Vlog, யோகா, போட்டோஷூட், பிறந்தநாள் கொண்டாட்டம், அழகு குறிப்புகள், நடனம் என ஏராளமான வெரைட்டிகளில் காணொளிகள் உள்ளன.
/tamil-ie/media/media_files/uploads/2021/04/Ns4.png)
Get NithyaFied எனும் பெயரில் இருக்கும் இவருடைய சேனலில் ஏகப்பட்ட மேஷ்-அப் காணொளிகள் உண்டு. அதிலும் பெரும்பாலான பாடல்கள் மக்களுடைய சாய்ஸ்தான். அந்த வரிசையில் பல்வேறு மொழிகளின் பாடல்களை ஒன்றிணைத்து காரில் சென்றபடியே ஸ்டைலிஷாகப் பாடிக்கொண்டு செல்லும் வீடியோ 73 மில்லியன் வியூஸ்களை பெற்றிருக்கிறது.
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் 'வாத்தி கம்மிங்' பாடலின் கவர் பாடலுக்கு நடனம் அமைக்கும் போது விபத்து ஏற்பட்டது. இது எல்லாவற்றையும் தன்னுடைய யூடியூப் சேனலில் பதிவு செய்திருந்தார் நித்யஸ்ரீ. ஒரு மாதத்திற்கு முன்பு 1 மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ் பெற்றதை அடுத்து மக்களுக்கு நன்றி கூறி வீடியோ போட்டிருந்தார். அதுவும் லட்சக்கணக்கான வியூஸ்களை பெற்றன. மக்களுக்குப் பிடிக்கும் விதமான ஏராளமான வீடியோக்களை பதிவு செய்யும் நித்யஸ்ரீ, மென்மேலும் அதிகப்படியான ரசிகர்களைப் பெறுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.