super singer nithyasree age nithyasree instagram : விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்து போனாலும் தொடர்ந்து ஆணி அடித்தது போல் என்றும் தலைதூக்கி நிற்கும் நிகழ்ச்சி என்றால் அது சூப்பர் சிங்கர் தான். ஜீனியர், சீனியர் என தொடர்ந்து 6 சீசன்களை தாண்டி இந்த நிகழ்ச்சி வெற்றி பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது.
Advertisment
இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பலரும் இப்போது ஸ்டார்ஸ் தான். சீனியர் சீசனில் கலந்துக் கொண்ட திவாகர், சந்தோஷ், பிரவீன், சத்ய பிரகாஷ் இப்போது கோலிவுட்டில் டாப் பாடகர்கள் வரிசையில் நிற்கிறார்கள். அதே போல், ஜூனியர் சீசனில் கலந்துக் கொண்ட நித்யஸ்ரீ, பிரியங்கா, ஸ்ரீஷா பற்றி கேட்கவே வேண்டாம்.
ஜூனியர் குட்டீஸ் எல்லாம் இப்போது வளர்ந்து விட்டார்கள். அதிலும் குறிப்பாக நித்யஸ்ரீ-க்கு சமூகவலைத்தளங்களில் ஏகப்பட்ட ஃபேன்ஸ். அவரை இன்ஸ்டாவில் பின் தொடர்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். சூப்பர் சிங்கரில் முதலில் நித்யஸ்ரீ- யின் அக்கா தான் கலந்துக் கொண்டார். ஆனால் அவரால் நினைத்த இலக்கை எட்ட முடியவில்லை.
பின்பு ஜூனியர் சீசனில் தனது தங்கையை களம் இறக்கினார். அக்காவையே ஓவர்டெக் செய்து இறுதி சுற்று மேடை வரை ஏறினார் நித்யஸ்ரீ. மொத்த குடும்பமும் அவருக்கு பக்கபலமாக இருந்தது. அதன் பின்பு சிங்கபூர், மலேசியா வரை நித்யஸ்ரீ குரல் கொடி கட்டி பறந்தது.
பாடுவதில் தொடங்கி, ட்ரெஸிங் என அனைத்திலும் தனது அக்காவை ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு நித்யஸ்ரீ இன்று அடைந்திருக்கும் வளர்ச்சி பிரமிப்பை ஏற்படுத்துகிறது. கடந்த வருடம் கேரளாவில் வெள்ளம் வந்து எல்லோரும் உணவுக்கும், உடைக்கும், இருப்பிடத்திற்கு அவதிப்பட்டு கொண்டிருக்கும்போது, நித்யஸ்ரீ குடும்பம், மொத்தமாக ரூ. 1.5 லட்சத்தை வசூல் செய்து மலையாள கிளப்பின் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
இதற்கு பலரும் தங்களது ஆதரவு குரல்களை பதிவு செய்திருந்தனர். சமீப காலமாக நித்யஸ்ரீ வித விதமாக ஃபோட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டா,ட்விட்டரில் பதிவு செய்து வருகிறார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு.
இயக்குனர் ரவிஅரசு படத்தில் ‘ஈட்டி’ படத்தில் ஹீரோ அதர்வாவுக்கு தங்கையாக நடிக்க, துருதுருன்னு ஒரு பொண்ணு வேணும்னு தேடிக்கிட்டு இருந்தார். அந்த நேரம் தங்கச்சி கேரக்டர்ல நம்ம நித்யஸ்ரீ தான் நடிச்சி இருந்தாங்க.
இப்படி ஏகப்பட்ட திறமைகளை உள்ளடக்கிய நித்யஸ்ரீ க்கு கண்ணு பட்டுடீச்சி போல, சமீபத்தில் அவருக்கு ஸ்டண்டில் விபத்து ஏற்பட்டது. இந்த வீடியோவை அவரே வெளியிட்டிருந்தார். இந்நிலையில், அவருக்கு மிகவும் ஆபத்தாக இருப்பதாக சில வதந்திகளும் பரவின. ஆனால் அது உண்மை இல்லை சின்னதாக ரெஸ்ட் டுத்து விட்டு மீண்டும் பணியை தொடர்வேன் என அவர், விளக்கியுள்ளார். இந்த வயதில் இப்படியொரு எனர்ஜியா என வியக்க வைத்துள்ளார் நித்யஸ்ரீ.