/tamil-ie/media/media_files/uploads/2020/10/021.2-5.jpg)
super singer pooja husband pooja vaidyanath
super singer pooja husband pooja vaidyanath : பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திவரும் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சி பல வருடங்களாக நடந்து வருகிறது. பல திறமையான பாடகர்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் உலகத்தின் பார்வைக்கு வந்தனர். அடித்தட்டு மக்களில் பலரது கனவுகளை நினைவாக்கிய நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர்.
அப்படிப்பட்ட பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பூஜா வைத்யநாதன் தற்போது பல நாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் பாட்டு பாடும் விடியோவும், அவரின் சில போட்டோக்களும் அவ்வப்போது பதிவு செய்வார்.
View this post on Instagram#weekend #tiktokcomedy #goundamani #kamalhaasan #singaravelan #tamilcomedy #singermano #tiktokindia
A post shared by Pooja Vaidyanath (@pooja_vaidyanath) on
பாடகர் பூஜா மெர்சல் படத்தில் ஆலப்போறேன் தமிழன் பாடலில் இடையில் வரும் சில வரிகளை பாடியிருப்பார். இந்த வரிகளை ஏ.ஆர்.ரகுமான் இசையில் அழகாக பாடியிருப்பார் பூஜா. இவரின் குரலை கேட்ட ரகுமான் பூஜாவின் குரல் மறைந்த பிரபல பாடகி ஸ்வர்ணலதாவின் குரலை போல உள்ளது என்று ஏ.ஆர் ரகுமானே கூறினாராம்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இனிமையான குரலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி, அனைவரையும் கவர்ந்தார். தற்போது பின்னணிப் பாடகியாக, திரைப்படங்களில் பாடி வரும் பூஜா, வித விதமான போட்டோஸ் சமூகவலைதளங்களில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அதுமட்டுமில்லை தனது கணவருடன் சேர்ந்து டிக் டாக் செய்வது பூஜாவின் ஃபன் டைம். இவர்களது ஜோடி பார்ப்பதற்கே அமர்க்களமாக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us