ஒரே வீடியோவில் அரங்கத்தையே அழ வைத்த சூப்பர் சிங்கர் பூவையார்! இப்ப எப்படி இருக்காரு தெரியுமா?

படிக்க வேண்டிய வயதில் தந்தை இழந்த குடும்பத்தின் கஷ்டத்தை ஏற்றுக் கொண்டு கானா பாடல் பாடி அம்மாவுக்கு உதவியாக இருந்தார்.

By: Updated: August 6, 2020, 04:35:36 PM

super singer poovaiyar family super singer poovaiyar : விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் சிறுவன் பூவையார் என்கிற கப்பீஸ். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் பல நடிகருக்கு பாட்டு பாடி வருகிறார்.

கிராமத்தில் கானா பாடல் பாடிக்கொண்டிருந்த பூவையார் என்கிற நபீஸ் சங்கீதம் முறைப்படி கற்ற மாணவர்களுடன் போட்டியிட்டு பைனல் வரை சென்றார். அத்துடன் இவருக்கு பிகில் திரைப்படத்தில் பாடியதுடன் நடித்தார். அதனை தொடர்ந்து ஆதி தனது பாடல் ஆல்பம் அல்லது திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு பூவையாருக்கு கொடுப்பதாக கூறினார்.

இந்த நிலையில் மேடை நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் என இவர் பிஸியாகி விட்டார். இவ்வளவு எளிதாக பூவையார் இந்த இடத்திற்கு வந்துவிடவில்லை. படிக்க வேண்டிய வயதில் தந்தை இழந்த குடும்பத்தின் கஷ்டத்தைஏற்றுக் கொண்டு கானா பாடல் பாடி அம்மாவுக்கு உதவியாக இருந்தார்.

அப்பபோது தான் இந்த சூப்பர் சிங்கர் மேடை அவருக்கு கிடைத்தது. முழு திறமையும் வெளிப்படுத்தி வெற லெவலுக்கு சென்றார் செல்ல கப்பீஸ்.

சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் திரைப்படங்களில் நடித்து கொண்டும், பாடிக்கொண்டும் வருகின்றார்.

ரசிகர்கள் இவர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த சின்ன வயதிலேயே சினிமாவில் உள்ள பல பிரபலங்களின் மத்தியில் இவ்ளோ!!! பெரிய வாய்ப்பா என்று ரசிகர்கள் பூவையாருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Super singer poovaiyar family super singer poovaiyar songs vijay tv super singer poovaiyar home

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X