சூப்பர் சிங்கர் பயணம்.. காதல் கிசு கிசு.. ஆல்வேஸ் போல்ட் கேர்ள் விஜய் டிவி பிரகதி!

இவர் இந்திய கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்தின் உறவினர் என்பதும் குறிப்படத்தக்கது.

super singer pragathi age vijaytv supersinger pragathi
super singer pragathi age vijaytv supersinger pragathi

super singer pragathi age vijaytv supersinger pragathi : சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல திறமையுள்ள பாடகர்கள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். பிறகு அந்நிகழ்ச்சியில் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து திரைப்படங்களில் பாடுவதற்கான வாய்ப்பை எளிதாக பெற்று பிரபலமடைந்துள்ளனர்.

அந்த வகையில் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த பிரகதி குருபிரசாத் விஜய் டிவி நடத்திய ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய இனிமையான குரலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி, அனைவரையும் கவர்ந்தார். இவர் தற்போது திரைப்படங்களுக்கு பின்னணி பாடகியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் நடிகர் அசோக் செல்வனை காதலிப்பதாகவும் கூறப்பட்டது.

இயக்குநர் பாலா, சசிகுமாரை வைத்து இயக்கிய ’தாரை தப்பட்டை’ படத்தில் சப்போர்ட்டிங் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து பிரகதியை முன்னணி கதாபாத்திரமாக வைத்து மேலும் ஒரு படத்தை இயக்கவிருப்பதாக, பாலா அறிவித்தார். இருப்பினும், இப்படம் பின்னர் கைவிடப்பட்டது.

சிறுவயது முதலே இசை மீது கொண்ட ஆர்வத்தால் சிறு வயது முதலே சங்கீதத்தை கற்று வந்தார். பாடகி பிரகதி 2010 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் நடந்த ஒரு ஜூனியர் பாடல் நிகழ்ச்சியில் பங்குபெற்று முதல் பரிசை வென்றார். இவர் இந்திய கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்தின் உறவினர் என்பதும் குறிப்படத்தக்கது.

பிரகதி குருபிரசாத் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான ஒருவராகவும் இருக்கிறார். அவருக்கு அங்கு தற்போது 5 லட்சத்து 35 ஆயிரம் ரசிகர்கள் followers ஆக இருக்கிறார்கள். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் பாடும் வீடியோக்கள் மற்றும் மாடலிங் செய்யும் புகைப்படங்கள் பலவற்றை வெளியிட்டு வருகிறார் பிரகதி. அவற்றுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு கடற்கரையில் மிகவும் ஹாட்டான உடையில் தண்ணீரில் நனைந்தபடி அவர் போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் பிரகதி குடிக்கு அடிமையாகி இருக்கிறார் என ஒரு செய்தி இணையத்தில் பரவி இருந்தது. ரசிகர்களுக்கு அந்த செய்தி அதிர்ச்சி அளித்த நிலையில் அது பற்றி பிரகதி குரு பிரசாத் இன்ஸ்டாகிராமில் விளக்கமளித்திருந்தார். “இன்டர்நெட்டில் படிக்கும் அனைத்தையும் நம்பி விடாதீர்கள்” என அவரது ரசிகர்களை கேட்டுக் கொண்டிருந்தார்.

மாடலிங் துறையில் நுழைந்தது பற்றி மாடலிங் வாய்ப்பு எதேச்சையாக கிடைத்தது. பிரகதி சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவருக்கு விளம்பரங்கள் பலவற்றிலும் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. மேலும் அவரை வைத்து போட்டோ ஷூட் மற்றும் பிரிண்ட் மாடலிங் செய்யவும் பலர் அவரை அணுகியிருக்கிறார்கள். பாடுவது மட்டுமின்றி கேமரா முன்பு இருப்பதும் அவருக்கு பிடித்திருக்கிறது என்பதால் மாடலிங்கில் தொடர்ந்து ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Super singer pragathi age vijaytv supersinger pragathi instagram pragathi ashok selvan pragathi songs

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express