super singer prithika songs supersinger : விஜய் டிவி `சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில, ஜூனியர் சீசனில் கலந்துக் கொண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் டைட்டில் வின்னராக மகுடம் சூடிய ப்ரித்திகாவை அவ்வளவும் எளிதாக மறந்து விட முடியாது. அழகான கிராமத்து குரல் வளம்.
நிகழ்ச்சின் ஆரம்பத்தில் கேள்வி ஞானத்துலதான் பாடினார். அந்நிகழ்ச்சியின் ஒரு சுற்றுக்கு வந்த பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம் ப்ரித்திகா படிச்சிகிட்டிருந்த திருவாரூர் மாவட்டம் தியானபுரம் அரசுப் பள்ளிக்கு நேரில் சென்று அவரை மனதார வாழ்த்தினார்.
பின்பு, முறைப்படி இசைக் கத்துக்க குடும்பத்துடன் சென்னைக்குக் குடியேறினார். அப்போது இசைப் பள்ளியில படிக்க அவருக்கு உதவினார் மாணிக்க விநாயகம். பரியேறும் பெருமாள் படத்தில் வா ரயில் விட போலாம் வா என்ற பாடலைப் பாடிய ப்ரித்திகாவின் குரலில் சொக்குண்டு கிடக்கிறார்கள் இசைப் பிரியர்கள்.அந்த சீசனில் ஒரு கலக்கு கலக்கி கடைசியில் டைட்டில் வின்னர் ஆனார் ப்ரித்திகா. சிவகார்த்தியேகன் கையினால் பரிசு வழங்கப்பட்டது. சொந்த வீடு ப்ரித்திகாவால் அவரின் குடும்பத்துக்கு கிடைத்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil