Super Singer Priyanka Deshpande Skincare secrets Tamil News
Super Singer Priyanka Deshpande Skincare secrets Tamil News : நகைச்சுவை உணர்வோடு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதில் பிரியங்கா கேடி. தனக்கென தனிப்பட்ட யூடியூப் சேனலையும் ஆரம்பித்து அதில் ஏகப்பட்ட சுவாரசிய கன்டென்ட்களையும் தொடர்ந்து கொடுத்து வருகிறார். அந்த வரிசையில், தன்னுடைய ஆரோக்கியமான சருமத்திற்கான சீக்ரெட்டுகளை பகிர்ந்துகொண்டார். அதனை இனி பார்க்கலாம்..
Advertisment
Priyanka Deshpande
"பிரபலங்கள் என்றால் தூங்கப் போகும்போது பிரியங்கா சோப்ராவாகவும் எழும்போது ஐஸ்வர்யா ராயாகவும் எப்போதும் இருக்க முடியாது. எல்லோருமே சாதாரண மனிதர்கள்தான். அழகுக்காக நான் பின்பற்றும் மிகப் பெரிய சீக்ரெட் இன்க்ரீடியன்ட் 'என்னை மனதார காதலிப்பதுதான்'. நாம் எப்படி இருக்கோமோ அப்படியே முதலில் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம். அதற்கு பிறகுதான் மெருகேற்றும் டெக்னிக்கெல்லாம்.
Priyanka Beauty Tips
Advertisment
Advertisements
சரும பராமரிப்புக்காக நான் சின்ன வயசுல இருந்து பின்பற்றக்கூடிய சீக்ரெட் பொருள் பத்திதான் இன்று பார்க்கப்போகிறோம். அது வேறொன்றும் இல்லை, தயிர்தான். பொதுவாகவே நம் சருமம் பொலிவு பெற க்ளென்சிங், ஸ்க்ரப்பிங், மாஸ்க் மற்றும் மாய்ஸ்ச்சரைசிங் அவசியம். இது எல்லாவற்றுக்கும் தயிர் ஒன்றே போதும். அதனை எப்படிச் செய்யலாம் என்று பார்க்கலாம்.
முதலில் க்ளென்சிங். அதாவது சருமத்தில் மேல் இருக்கும் அழுக்குகளை நீக்குவது. அதற்கு வெறும் தயிர் அதிலும் புளித்த தயிர் என்றால் பெட்டர். அதனை முகத்தில் அப்லை செய்து மூன்று நிமிடங்களுக்கு நன்கு மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவலாம். தயிரில் இருக்கும் லேக்டிக் ஆசிட் இறந்த செல்களை அகற்ற உதவும்.
சருமத்தின் மேல் இருக்கும் அழுக்கை அகற்றியபிறகு, உள்ளிருக்கும் சருமத்தை சுத்தம் செய்ய ஸ்க்கரப்பிங் முக்கியம். அதற்கு 2 ஸ்பூன் தயிரோடு 1 ஸ்பூன் காபி தூள் கலந்து, முகத்தில் அப்லை செய்து மெதுவாக மசாஜ் செய்யவேண்டும். 3 நிமிடங்கள் கழித்து கழுவலாம். இதன்பிறகு, முகத்தில் இருக்கும் துளைகள் திறந்துகொள்ளும். இதன்பிறகு, ஐஸ் கட்டிகளை தேய்க்கவேண்டும். இது துளைகளை மூடிவிடும்.
அடுத்தது தயிரோடு தேன் கலந்து முகத்தில் தேய்த்து, 5 முதல் 10 நிமிடங்கள் அப்படியே ரெஸ்ட் எடுக்கவும். பிறகு நன்கு கழுவினால் அழகான பெண் வருவார். அதுதான் நீங்க. பிறகு மாய்ஸ்ச்சரைசிங். உங்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு மாய்ஸ்ச்சரைசர் அப்லை பண்ண வேண்டும். மிருதுவான சருமம் அவசியம். பல உடல் பிரச்சனைகளை தயிர் சரிசெய்கிறது. நிச்சயம் இதை ட்ரை செய்து பாருங்கள். மாற்றம் நிச்சயம்".
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil