scorecardresearch

சூப்பர் சிங்கர் பிரியங்காவின் நீண்ட கூந்தலுக்கான ரகசியம் இதுதானாம்!

Super Singer Priyanka Lockdown activities இப்போது வீட்டில் நன்கு ஓய்வெடுத்து, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதால் சருமம் பொலிவாகிறதை நன்கு உணர்கிறேன்

சூப்பர் சிங்கர் பிரியங்காவின் நீண்ட கூந்தலுக்கான ரகசியம் இதுதானாம்!
Super Singer Priyanka Lockdown activities Tamil News

Super Singer Priyanka Lockdown activities Tamil News : சூப்பர் சிங்கர் பிரியங்கா என்றாலே ‘சின்ன சின்ன வண்ணக்குயில்’ பாடலும் கூடவே நினைவுக்கு வரும். அவர், மெல்லிய குரலுக்குச் சொந்தக்காரர் மட்டுமல்ல, பல் மருத்துவரும்கூட. இந்த லாக்டவுனில் அவருடைய நாள்கள் எப்படியெல்லாம் நகர்கிறது, பிரியங்காவின் நீண்ட கூந்தலுக்கான ரகசியம் மற்றும் நம் பற்களை எப்படியெல்லாம் பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்களைச் சமீபத்தில் பகிர்ந்துகொண்டார்.

பொதுவாகவே ஷோ எதுவும் இல்லாத நாட்களில், தன்னுடைய பெரும்பாலான பொழுதை வீட்டில் குடும்பத்தோடு செலவிடுவதுதான் அவருக்கு மிகவும் பிடிக்கும். அப்படியே வெளியே செல்லவேண்டும் என்றால், பீச் தான் அவருடைய ஃபேவரைட் ஸ்பாட். மற்ற நேரங்களில், நண்பர்களை வீட்டிற்கு அழைத்து திரைப்படங்கள், அரட்டை என வீட்டிற்குள்ளேயே நேரத்தை செலவிடுவதுதான் பிரியங்காவிற்குப் பிடிக்குமாம்.

மேக் அப் போடுவதில் அதிக ஆர்வம் காட்டாத பிரியங்கா, நிகழ்ச்சி நேரங்களின்போது மட்டும் உடைகளுக்கு ஏற்றபடி மேக்-அப் போட்டுக்கொள்வார். அதற்குக் காரணம், சோர்வு எதுவும் தெரியக்கூடாது என்பதற்காகத்தான். அதேபோல, சரும பராமரிப்பிற்காக எந்த பொருளையும் முயற்சி செய்துகூடப் பார்க்கமாட்டார். சாப்பிடும் பொருள்களை சருமத்திற்குப் பயன்படுத்தக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் பிரியங்கா, தற்போது ஆரோக்கியமான டயட்டை பின்பற்றி வருகிறார்.

“லேசான ஒர்க் அவுட்ஸ், சத்தான காய்கறி மற்றும் பழங்கள் சாப்பிட்டாலே போதும். முடி, நகம் மற்றும் சருமம் ஆரோக்கியமாக இருப்பதை நான் உணர்கிறேன். இதுதான் என்னுடைய முதல் முயற்சி. ஆனால், நல்ல பலன் கிடைத்திருக்கிறது. அதேபோல கல்லூரி நாட்களில் நிறைய முடி உதிரும் பிரச்சனை இருந்தது. அதற்குக் காரணம், நாங்கள் உபயோகிக்கும் கேப் மற்றும் வேலை பளு. ஆனால், இப்போது வீட்டில் நன்கு ஓய்வெடுத்து, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதால் சருமம் பொலிவாகிறதை நன்கு உணர்கிறேன்” என்று தன்னுடைய எளிமையான லாக் டவுன் டயட் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

மேலும், உடல்நிலை சரியில்லாமல் போனால், உடனே மருந்து மாத்திரை சாப்பிடுவதைவிட, உடலுக்கு நல்ல ஓய்வு மற்றும் ஆரோக்கியமான உணவு, போதுமான அளவு தண்ணீர் குடித்தாலே போதும் என்கிற குறிப்பையும் முன்வைத்தார். இரண்டு வருடங்களில் பல் மருத்துவ க்ளினிக் தொடங்கும் திட்டத்தில் இருக்கும் பிரியங்கா, பற்களில் எந்தவித சேதம் ஏற்படாமலிருக்கத் தினமும் இரண்டு முறை பற்களை நன்கு சுத்தம் செய்யவேண்டும் என்கிற செல்ல மிரட்டலோடு விடைபெற்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Super singer priyanka lockdown activities tamil news