/tamil-ie/media/media_files/uploads/2021/02/2-Copy-2-78.jpg)
super singer priyanka songs vijay tv super singer
super singer priyanka songs vijay tv super singer: சூப்பர் சிங்கர் பிரியங்கா பற்றி தமிழ் மக்களுக்கு அறிமுகமே தேவையில்லை. தேன் போன்ற குரலுக்கு சொந்தக்காரியான பிரியங்காவுக்கு திரைப்பிரபலங்கள் உட்பட முன்னணி இசைப்பாடகர்களும் ஃபேன்ஸ் தான். பிரியங்காவின் குரலில் எந்த பாடலை கேட்டாலும் அந்த பாடல் அப்படியே பிடித்து விடும். இதுவே அவரின் இந்த பயணத்திற்கு கிடைத்த வெற்றி.
சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் பிரியங்காவின் குரலில் ஒலித்த ‘சின்னச் சின்ன வண்ணக் குயில் ‘ என்றபாடலின் மூலம் ஒட்டு மொத்த அரங்கத்தினையும் கவர்ந்திழுத்தது. பிரியங்காவின் இந்த குரல் வலத்தை கண்டு வாயடைத்து போகாத பிரபலங்களே இல்லை எனலாம். சூப்பர் சிங்கர் சீசனில் பிரியங்கா முதல் வெற்றி கனியை பிடிக்க வில்லை என்றாலும் அனைவரின் இதயத்திலும் வீடுகளிலும் முதல் இடத்தை பிடித்து விட்டார் என்பதே உண்மை.
சமூகவலைத்தளங்களிலும் அவ்வப்போது பிரியங்கா பாடல்களை பாடி பதிவிட்டு வருகிறார். எஸ்.பி பாலசுப்ரமணியம் தொடங்கி வளர்ந்த , வளரும் அனைத்து பாடகர்களுடனும் பிரியங்கா பாடலை பாடி வருகிறார். மருத்துவ படிப்பை தொடர்ந்து வரும் பிரியங்கா சாதரண மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவர்.
அவரின் தாயார் பிரியங்காவை மெருகேற்றி சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் பாட வைத்து அவரின் குரலை உலகறிய செய்தார். அதுமட்டுமில்லை பிரியங்காவின் வெற்றிக்காக அவர் பல இழப்புகளை சந்தித்துள்ளார். பிரியங்காவின் குரலுக்கு பாடகி சித்ரா மிகப் பெரிய ஃபேன். இதை அவரே பலமுறை சூப்பர் சிங்கர் மேடையில் கூறியுள்ளார்.அமைதியான , ஒழுக்கமான குணமும் பிரியங்காவை இந்த அளவிற்கு வளர்த்தியுள்ளது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். கல்லூரியில் கூட பிரியங்கா இருக்கும் இடம் கூட தெரியாமல் படு சைலண்டாக இருப்பாராம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.