ஜூனியராக தொடங்கிய இசை பயணம்…. சீனியர், சாம்பியன் என வளர்ந்த சாய் சரண்!

மணப்பெண் அவரின் உறவுக்கார பெண் மீரா. இருவரின் ஜோடி பொருத்தமும் கண்படும் வகையில் உள்ளது.

By: Updated: November 3, 2020, 04:09:58 PM

super singer sai charan instagram sai charan wife : பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற சூப்பர் சிங்கர் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் சாய்சரண். தனது சிறு வயதில் இருந்தே சங்கீதத்தை கற்றுவரும் சாய்சரண் கடந்த 2010ஆம் ஆண்டு ஒளிபரப்பான சங்கீத மஹா யுத்தம் என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

21 வயதில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்குபெற்ற சாய்சரண் இந்த சீசனில் தெய்வீக சுற்றில் பாடிய இசைத்தமிழ் நீ செய்த என்ற பாடல் மிகவும் பிரபலமடைந்தது. மேலும், ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீசன் 3 இல் வெற்றியாளராகவும் முடிசூட்டப்பட்டார் பாடகர் சாய்சரண். அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் டி20 போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளர் ஆகவும் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றார். மேலும் மனம் கொத்தி பறவை படத்தில் பின்னணி பாடகராக பாடும் வாய்ப்பினை கொடுத்தார் இமான். அதன் பின்னர் சாட்டை, வத்திக்குச்சி, ஜில்லா, மருது போன்ற பல்வேறு படங்களில் பின்னணி பாடல்களை பாடியிருக்கிறார் சாய்சரண்.

விஜய் டிவி எல்லா இசை நிகழ்ச்சியிலும் சாய் சரணை பார்க்கலாம். முறைப்படி இசை கற்ற சாய் சரணுக்கு ரசிகர்கள் ஏராளம்.
ஊரடங்கு நடுவே தனது நிச்சயதார்த்ததை எளிமையாக முடித்து விட்டார் சாய் சரண். நிச்சயதார்த்த விழாவை கல்யாணமே முடிந்து விட்டதாக தகவல்கள் பரவின.ஆனால், அது நிச்சயதார்த்தம் மட்டுமே என்று சாய் சரண் தனது இன்ஸ்டாவில் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிச்சயதார்த்தத்தில் சூப்பர் சிங்கர் போட்டியாளரும் பின்னணி பாடகருமான திவாகரும் சென்று இருந்தனர். அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகின மணப்பெண் அவரின் உறவுக்கார பெண் மீரா. இருவரின் ஜோடி பொருத்தமும் கண்படும் வகையில் உள்ளது.

இந்நிலையில், இவரின் திருமணமும் 3 நாட்களுக்கு முன்பு முடிந்தது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Super singer sai charan instagram sai charan wife vijay tv super singer hotstar sai saran marriage

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X