super singer saicharan wife vijay tv : பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற சூப்பர் சிங்கர் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் சாய்சரண். தனது சிறு வயதில் இருந்தே சங்கீதத்தை கற்றுவரும் சாய்சரண் கடந்த 2010ஆம் ஆண்டு ஒளிபரப்பான சங்கீத மஹா யுத்தம் என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
Advertisment
21 வயதில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்குபெற்ற சாய்சரண் இந்த சீசனில் தெய்வீக சுற்றில் பாடிய இசைத்தமிழ் நீ செய்த என்ற பாடல் மிகவும் பிரபலமடைந்தது. மேலும், ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீசன் 3 இல் வெற்றியாளராகவும் முடிசூட்டப்பட்டார் பாடகர் சாய்சரண். அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் டி20 போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளர் ஆகவும் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றார். மேலும் மனம் கொத்தி பறவை படத்தில் பின்னணி பாடகராக பாடும் வாய்ப்பினை கொடுத்தார் இமான். அதன் பின்னர் சாட்டை, வத்திக்குச்சி, ஜில்லா, மருது போன்ற பல்வேறு படங்களில் பின்னணி பாடல்களை பாடியிருக்கிறார் சாய்சரண்.
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு பிரபலங்களின் திருமண நிகழ்ச்சி உத்தரவை மிகவும் எளிமையாக நடைபெற்று வருகிறது அந்த வகையில் ஊரடங்கு நடுவே தனது நிச்சயதார்த்ததை எளிமையாக முடித்து விட்டார் சாய் சரண். நிச்சயதார்த்த விழாவை கல்யாணமே முடிந்து விட்டதாக தகவல்கள் பரவின.ஆனால், அது நிச்சயதார்த்தம் மட்டுமே என்று சாய் சரண் தனது இன்ஸ்டாவில் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நிச்சயதார்த்தத்தில் சூப்பர் சிங்கர் போட்டியாளரும் பின்னணி பாடகருமான திவாகரும் சென்று இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. மணப்பெண் அவரின் உறவுக்கார பெண் மீரா. இருவரின் ஜோடி பொருத்தமும் கண்படும் வகையில் உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news