Advertisment

பேங்க் ஆபிசர் டூ சூப்பர் சிங்கர்... விஜய் டிவி செளந்தர்யா கெரியர் லைஃப்!

நடிகர் விக்னேஷ் கார்த்திக்கும், சௌந்தர்யாவும் பகல் நிலவு சீரியலில் ஒன்றாக நடித்தவர்கள்

author-image
WebDesk
New Update
super singer soundarya age soundarya instagram

super singer soundarya age soundarya instagram

super singer soundarya age soundarya instagram : சூப்பர் சிங்கர் சவுந்தர்யா, பற்றி அறிமுகமே வேண்டாம். விஜயின் மாஸ்டர் படத்தில் சௌந்தர்யா நடித்து உள்ளார்.

Advertisment

இவர் விக்னேஷ் கார்த்தி உடன் நடித்த ஷாட் ஃப்லிம்கள் பயங்கர வைரல்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரகமாக முடிவடைந்த சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் போட்டியாளராக சௌந்தர்யா கலந்து கொண்டவர். பின் அதே சேனலில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் கதாநாயகியாக நடித்தார். அதன் பின் ஷார்ட் பிலிம் படங்களிலும் நடித்து உள்ளார். இவர் பல நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். தற்போது வெள்ளித்திரையிலும் கால் தடம் பதித்து கலக்கி கொண்டு வருகிறார்.

நடிகர் விக்னேஷ் கார்த்திக்கும், சௌந்தர்யாவும் பகல் நிலவு சீரியலில் ஒன்றாக நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விக்னேஷ் கார்த்தி வீடியோ ஜாக்கியாக தான் தன்னுடைய பயணத்தை வீடியோ அதனை தொடர்ந்து இவர் நிறைய குறும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதற்கு பிறகு தான் இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக ஆனார்.

சவுந்தர்யாவுக்கு சமூகவலைத்தளங்களில் ஏகப்பட்ட ஃபேன்ஸ். இவரின் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவியும். ஆரம்பத்தில் காலேஜ் படித்து முடித்து சவுந்தர்யா பேங்கில் வேலை பார்த்து வந்துள்ளார். அதன் பின்பு தான் சின்னத்திரையில் வலம் வர தொடங்கினார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் மூலம் நமக்கு அறிமுகம் ஆனவர்தான் சௌந்தர்யா. அதன் பிறகு பகல்நிலவு சீரியலில் நடித்துக் கொண்டிருந்தவர் திடீரென்று சீரியலில் இருந்து விலகினார்.அதன் பிறகு சில பேட்டிகளில் சீரியல் இருந்து அவராக விலகவில்லை விஜய் டிவியில் இருந்து விலக்கப்பட்டார் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் அதற்கான காரணத்தை விஜய் டிவி சரியாக கூறவில்லை என்றும் வருத்தத்தோடு கூறியிருந்தார்.

Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment