/tamil-ie/media/media_files/uploads/2020/08/10-32.jpg)
super singer soundarya instagram soundarya Bala Nandakumar
super singer soundarya instagram soundarya Bala Nandakumar : சூப்பர் சிங்கர் சவுந்தர்யா, பற்றி அறிமுகமே வேண்டாம். அடுத்து, விஜயின் மாஸ்டர் படத்தில் சௌந்தர்யா நடித்து உள்ளார். இவர் விக்னேஷ் கார்த்தி உடன் நடித்த ஷாட் ஃப்லிம்கள் பயங்கர வைரல்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரகமாக முடிவடைந்த சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் போட்டியாளராக சௌந்தர்யா கலந்து கொண்டவர். பின் அதே சேனலில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் கதாநாயகியாக நடித்தார். அதன் பின் ஷார்ட் பிலிம் படங்களிலும் நடித்து உள்ளார். இவர் பல நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். தற்போது வெள்ளித்திரையிலும் கால் தடம் பதித்து கலக்கி கொண்டு வருகிறார்.
நடிகர் விக்னேஷ் கார்த்திக்கும், சௌந்தர்யாவும் பகல் நிலவு சீரியலில் ஒன்றாக நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விக்னேஷ் கார்த்தி வீடியோ ஜாக்கியாக தான் தன்னுடைய பயணத்தை வீடியோ அதனை தொடர்ந்து இவர் நிறைய குறும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதற்கு பிறகு தான் இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக ஆனார்.
சவுந்தர்யாவுக்கு சமூகவலைத்தளங்களில் ஏகப்பட்ட ஃபேன்ஸ். இவரின் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவியும். ஆரம்பத்தில் காலேஜ் படித்து முடித்து சவுந்தர்யா பேங்கில் வேலை பார்த்து வந்துள்ளார். அதன் பின்பு தான் சின்னத்திரையில் வலம் வர தொடங்கினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.