'மதுரை பொண்ணு நான்... அப்பா வச்ச பரீட்சையில் ஜெயித்து சென்னைக்கு வந்தேன்': 'முத்த மழை': சவுந்தர்யா ஃபேமிலி சீக்ரட்ஸ்

எனக்கு மதுரை விட்டு வெளியில வந்து, சென்னையில ஒரு காலேஜ்ல படிக்கணும்னு ரொம்ப ஆசை. அப்போ அப்பா ஒரு சின்ன சவால் வைத்தார். "நீ 1100-க்கு மேல மார்க் எடுத்தா சென்னையில படிக்கலாம். இல்லைனா இங்கேயேதான் படிக்கணும்"னு சொன்னார்.

எனக்கு மதுரை விட்டு வெளியில வந்து, சென்னையில ஒரு காலேஜ்ல படிக்கணும்னு ரொம்ப ஆசை. அப்போ அப்பா ஒரு சின்ன சவால் வைத்தார். "நீ 1100-க்கு மேல மார்க் எடுத்தா சென்னையில படிக்கலாம். இல்லைனா இங்கேயேதான் படிக்கணும்"னு சொன்னார்.

author-image
WebDesk
New Update
Super Singer Soundarya

Super Singer Soundarya

தமிழ் தொலைக்காட்சியின் வரலாற்றில், இசைப் பிரியர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்த நிகழ்ச்சிகளில் ஒன்று "சூப்பர் சிங்கர்". திறமையான பாடகர்களை அடையாளம் கண்டு, அவர்களின் கனவுகளுக்கு சிறகுகள் கொடுக்கும் இந்த மேடையில், பல்லாயிரக்கணக்கானோரின் குரல்கள் ஒலித்திருக்கின்றன. அப்படி, ஒரு வசீகரமான குரலாலும், தனித்துவமான பாடும் பாணியாலும் ரசிகர்களைக் கவர்ந்தவர் சூப்பர் சிங்கர் சௌந்தர்யா. இசையையும், வாழ்க்கையையும் பற்றி அவர் பகிர்ந்துகொண்ட சில சுவாரஸ்யமான விஷயங்கள் இங்கே!

Advertisment

மியூசிக் மீது எனக்கு சின்ன வயசுல இருந்தே ஒரு ஆர்வம் உண்டு. ஏன்னா, எங்க அம்மா ஒரு மியூசிக் புரொஃபசர், கூடவே பரதநாட்டியம் டான்சரும் கூட. அதனால, அந்த ஆர்வம் எனக்கு இயல்பாவே வந்துச்சு. ஆனா, இதை ஒரு சீரியஸான கலை வடிவமா பார்க்குற அளவுக்கு எனக்கு அப்போ புரிதல் இல்லை. பாட்டு பாடுவோம், அவ்வளவுதான். ஆனா, இது ஒரு சீரியஸ் ஆர்ட் ஃபார்ம், இதுல நாம இன்னும் சிறப்பா பண்ணணும்னு எனக்கு உணர்ந்தது, மதுரையை விட்டு சென்னைக்கு வந்து ஒரு போட்டியில் கலந்துக்கிட்டபோதுதான்.

சுத்தி இவ்வளவு பேர் பயங்கரமா பாடுறத பார்த்ததும், இந்த கலைக்கான மரியாதையும், அதுல இருக்கிற தீவிரமும் எனக்கு அப்பதான் புரிஞ்சுது. அதனால, ஒரு புரொபஷனலா நான் என் பயணத்தை தொடங்கினது, எனக்கு 23-24 வயசு இருக்கும்போதுதான்.

அப்பாவோட சவால்!

Advertisment
Advertisements

நான் படிப்புல ரொம்ப சுட்டியான பொண்ணு. 1100-க்கு மேல மார்க் எடுத்த பொண்ணு. ஆனா, மீடியாவா என் கரியரை மாத்திக்கிட்டது எனக்கு ஒரு டர்னிங் பாயிண்ட். நான் பயப்படுறவ கிடையாது. பயம் எனக்கு சுத்தமா பிடிக்காது. அதனால, எப்பவுமே என்னை நானே தயார்படுத்திப்பேன்.

எனக்கு மதுரை விட்டு வெளியில வந்து, சென்னையில ஒரு காலேஜ்ல படிக்கணும்னு ரொம்ப ஆசை. அப்போ அப்பா ஒரு சின்ன சவால் வைத்தார். "நீ 1100-க்கு மேல மார்க் எடுத்தா சென்னையில படிக்கலாம். இல்லைனா இங்கேயேதான் படிக்கணும்"னு சொன்னார். அதுக்காகவே ரொம்ப போராடி படிச்சேன். கடைசியில் 1117 மார்க் எடுத்து அப்பாக்கிட்ட ஜெயிச்சிட்டேன். அப்புறம் என்ன? சென்னைக்கு வந்தேன், மீதி எல்லாம் வரலாறுதான்!

சென்னையின் இசை உலகம்!

சென்னையில காலேஜ் படிக்கும்போதுதான், நான் எதிர்பார்க்காத பல வாய்ப்புகள் கிடைச்சுது. "ஏன் நம்ம ஊர்ல இந்த மாதிரி இல்லை? ஏன் சென்னைக்கு மட்டும் இவ்வளவு சிறப்பான விஷயங்கள் நடக்குது?"னு அப்போலாம் நினைப்பேன். ஒரு மெட்ரோபாலிட்டனுக்கும், ஒரு சின்ன ஊருக்கும் இருக்கிற வித்தியாசம் அதுதான்.

இப்போகூட நான் சொல்வேன், கலைஞர்களுக்கு சரியான அங்கீகாரம் இன்னும் எல்லா ஊர்லயும் இல்லை. உதாரணத்துக்கு, ஒரு முழுநேர இசைக்கலைஞனா மதுரையில என்னால சர்வைவ் பண்ண முடியுமான்னு எனக்குத் தெரியல. ஆனா, சென்னையில அது சாத்தியம். சென்னையில இருக்கிற வாய்ப்புகள் ரொம்பவே அதிகம். ஒரு டீச்சரா இருந்தா கூட, இங்க சார்ஜ் பண்ற அளவுக்கு நீங்க மதுரையில சார்ஜ் பண்ண முடியாது. அது ஏன்னா, அங்கே மக்களுக்கு அந்த கலையின் மதிப்பு புரியாது.

கலைகளின் மதிப்பு!

என் அம்மா கிட்டத்தட்ட இருபது வருஷமா பரதநாட்டிய பள்ளி நடத்துறாங்க. சில மாணவர்கள், "ஆர்ட் ஃபார்ம்"னு சொல்ற கலைக்கு எதுக்கு இவ்வளவு பணம்ன்னு கேட்பாங்க. எங்க அம்மா ரொம்ப குறைஞ்ச கட்டணம்தான் கேட்பாங்க. இருந்தாலும், சிலருக்கு அதுகூட புரியாது. அந்த மனநிலை, என்னை ரொம்ப வருத்தப்பட வைக்கும்.

இங்கே சென்னைக்கு வந்தா, நிலைமை வேற. பாடகர் டி.எம். சௌந்தரராஜன் போன்ற ஜாம்பவான்களும் மதுரையிலிருந்து வந்தவங்கதான். திறமையை வளர்க்கலாம், ஆனால் அதையே ஒரு தொழிலாக மாற்றி வாழ்க்கையை நடத்த முடியுமா? அந்த மாதிரியான வாய்ப்புகள் தமிழ்நாட்டில் உள்ள மற்ற ஊர்களில் இன்னும் முழுமையா இல்லை. அதனாலதான், சென்னையின் வாய்ப்புகள் வேற லெவல்ல இருக்குன்னு நான் சொல்றேன், என்று எமோஷனலாக கூறுகிறார் சவுந்தர்யா. 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: