Super Singer Srinisha Jayaseelan Fashion Statement Tamil News : எத்தனை பாடகர்கள் வந்தாலும் ஸ்ரீநிஷாவின் தனித்துவமான குரலுக்குத் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. தன் வசீகர மெல்லிய குரலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மக்களைக் கட்டிப்போட்டவர் ஸ்ரீநிஷா. அதே நிகழ்ச்சியில் கே.பி.சுந்தராம்பாள் பாடிய பாடல்களை ஸ்ரீநிஷா பாடியது அனைவருக்குமான சர்ப்ரைஸ் ட்ரீட். மெலோடி முதல் ராப் வரை வெவ்வேறு பாடல்கள் மட்டுமல்ல குரலிலும் அதற்கேற்ற மாடுலேஷன் கொடுத்துப் பல ரசிகர்களைக் கொண்டிருக்கும் ஸ்ரீநிஷா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்.
View this post on Instagram
பாடல் மட்டுமா! பக்தி பாடலுக்குப் பட்டுப்புடவை, மெலடிக்கு ஃபேன்சி புடவை, ராப்புக்கு வெஸ்டர்ன் உடைகள் என தன் காஸ்டியூம்களிலும் வெரைட்டி காட்டுபவர். அதில் ஸ்ரீநிஷாவின் ஃபேவரைட் புடவைகள்தான். பாரம்பரிய புடவைக்கு ஏற்றபடி கோல்டு பிளேட்டட் ஆரம் மற்றும் காதணி. புடவைக்கு மேட்சாக செட் வளையல்கள். இந்த அவுட்ஃபிட்டை மெருகேற்றும் வகையில் பின்னிய கூந்தலில் சூடப்பட்டிருக்கும் மல்லிகைப்பூ. பெரும்பாலான வீடியோக்களில் இதுதான் இவருடைய ஹோம்லி ஸ்டைல்.
View this post on Instagram
வெஸ்டர்ன் அவுட்ஃபிட்டில் ஸ்ரீநிஷாவின் சாய்ஸ் பெரும்பாலும் அனார்கலி ட்ரெஸ் டாப். அதிலும் குறிப்பாக முழுநீளக்கைதான் ஸ்ரீயின் ஃபேவரைட். எந்த அவுட்ஃபிட்டாக இருந்தாலும் ‘நீட் அண்ட் ப்லேசென்ட்’ தோற்றம்தான் ஸ்ரீநிஷாவின் ப்ளஸ். முகம் சுளிக்கவைக்காத ஆடைகள், மிதமான மேக்-அப், படிந்த ஹேர்ஸ்டைல் என அத்தனையிலும் க்ளாசி டச் இருக்கும். இதனாலேயே இவருக்கு ஏராளமான ரசிகர்கள்.
View this post on Instagram
2016-ம் ஆண்டு ‘அம்மா கணக்கு’ திரைப்படம் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகம் ஆகியிருக்கும் ஸ்ரீநிஷா சென்னை எத்திராஜ் கல்லூரியில் பட்டம் பெற்றவர். இவருடைய பாடலுக்கு மட்டுமல்ல தொடர்ச்சியான இவருடைய ஆடைகளுக்கான ஸ்டைல் ஸ்டேட்மென்ட்டுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“