super singer srinisha jayaseelan vijay tv : விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்து போனாலும் தொடர்ந்து ஆணி அடித்தது போல் என்றும் தலைதூக்கி நிற்கும் நிகழ்ச்சி என்றால் அது சூப்பர் சிங்கர் தான். ஜீனியர், சீனியர் என தொடர்ந்து 6 சீசன்களை தாண்டி இந்த நிகழ்ச்சி வெற்றி பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பலரும் இப்போது ஸ்டார்ஸ் தான். சீனியர் சீசனில் கலந்துக் கொண்ட திவாகர், சந்தோஷ், பிரவீன், சத்ய பிரகாஷ் இப்போது கோலிவுட்டில் டாப் பாடகர்கள் வரிசையில் நிற்கிறார்கள். அதே போல், ஜூனியர் சீசனில் கலந்துக் கொண்ட நித்யஸ்ரீ, பிரியங்கா, ஸ்ரீஷா பற்றி கேட்கவே வேண்டாம்.
ஜூனியர் குட்டீஸ் எல்லாம் இப்போது வளர்ந்து விட்டார்கள். அதிலும் குறிப்பாக ஸ்ரீநிஷாவுக்கு-க்கு சமூகவலைத்தளங்களில் ஏகப்பட்ட ஃபேன்ஸ். அவரை இன்ஸ்டாவில் பின் தொடர்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள். சூப்பர் சிங்கர் ஜூனியர் முதல் சீசனில் தொடங்கி இப்போது வரை ஸ்ரீநிஷாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம்.
இந்த சீசனில் வெற்றியாளராக ஸ்ரீகாந்த் தேர்வு செய்யப்பட்டாலும் ஸ்ரீநிஷாவை தான் மக்கள் கொண்டாடினார்கள். கே.பி சுந்தரம்மாள் வாய்ஸில் கலக்குவார். மொத்த குடும்பமும் ஸ்ரீநிஷாவுக்கு பக்கபலமாக இருந்தது. அதன் பின்பு சிங்கபூர், மலேசியா வரை ஸ்ரீநிஷா குரல் கொடி கட்டி பறந்தது.
பாடுவதில் தொடங்கி, ட்ரெஸிங் என அனைத்திலும் நித்யஸ்ரீ இன்று அடைந்திருக்கும் வளர்ச்சி பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இளையராஜாவின் அம்மா கணக்கில் பாடினார். அதனைத்தொடர்ந்து, நயன் தாராவின் இமைக்கா நொடி படத்திலும் பாடினார். இப்போது கெளரி கிஷன் படத்திலும் சூப்பர் சிங்கர் புகழ் ஸ்ரீநிஷா ஜெயசீலன் ஒரு பாடலை பாடியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil