சிங்கப்பூரை அதிரவிட்ட ‘சூப்பர் சிங்கர்’ புகழ் செந்தில் கணேஷ் – ராஜலக்ஷ்மி! (வீடியோ)

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி. நாட்டுப்புறப் பாடல்களை எழுதி, மேடையில் பாடுவது தான் இவர்களது சிறப்பு அம்சம். இரண்டு பேரும் வெவ்வேறு அணிகளில் பாடி தங்களது திறமையை நிரூபித்து வந்தனர். சி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்… சூப்பர் சிங்கர் 6வது சீசனில் நாட்டுப்புறப் பின்னணியில் பாடல்களை பாடி மக்களைக் கவர்ந்தவர்கள் செந்தில் – ராஜலட்சுமி தம்பதி. இவர்களே பாடலை எழுதி, அதை […]

super singer title winner senthil ganeshg rajalakshmi pongal special song - சிங்கப்பூரை அதிரவிட்ட 'சூப்பர் சிங்கர்' புகழ் செந்தில் கணேஷ் - ராஜலக்ஷ்மி (வீடியோ)
super singer title winner senthil ganeshg rajalakshmi pongal special song – சிங்கப்பூரை அதிரவிட்ட 'சூப்பர் சிங்கர்' புகழ் செந்தில் கணேஷ் – ராஜலக்ஷ்மி (வீடியோ)

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி. நாட்டுப்புறப் பாடல்களை எழுதி, மேடையில் பாடுவது தான் இவர்களது சிறப்பு அம்சம். இரண்டு பேரும் வெவ்வேறு அணிகளில் பாடி தங்களது திறமையை நிரூபித்து வந்தனர்.

சி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்…

சூப்பர் சிங்கர் 6வது சீசனில் நாட்டுப்புறப் பின்னணியில் பாடல்களை பாடி மக்களைக் கவர்ந்தவர்கள் செந்தில் – ராஜலட்சுமி தம்பதி. இவர்களே பாடலை எழுதி, அதை பாடியும் வந்தனர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் அந்த சீசனை இவர்களுக்காவே நேயர்கள் அதிகம் பார்த்தனர்.


இறுதியில், சூப்பர் சிங்கர் டைட்டிலை செந்தில் கணேஷ் தட்டிச் செல்ல, சூட்டோடு சூடாக ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் ‘என்ன மச்சான்’ பாடலை இத்தம்பதி பாடினர். பாடலும் ஹிட்டாக, அடுத்தடுத்த இவர்களுக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு வந்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில், ‘கரிமுகன்’ எனும் படத்தில் ஹீரோவாகவும் செந்தில் கணேஷ் நடித்தார்.

இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இருவரும் சேர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.


இந்நிலையில், பொங்கல் சார்ந்த சர்வதேச பாடல் ஒன்றை சூப்பர் செந்தில் கணேஷ், அவரது மனைவி ராஜலட்சுமி ஆகியோர் பாடியுள்ளனர்.


இதன் படப்பிடிப்பு மற்றும் பாடல் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில், அவர்கள் இருவரும் பாடிய தமிழா் திருநாள் பாடல் வெளியாகியுள்ளது.

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் உலகத் தமிழர்கள் அனைவரையும், இந்த பொங்கல் ஸ்பெஷல் பாடல் ஈர்த்துள்ளது.

நீங்க கலக்குங்க ப்ரோ…!

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Super singer title winner senthil ganeshg rajalakshmi pongal special song

Next Story
மார்கழி விரத மகிமைகள்: பெண்கள் அறிந்து கொள்ள வேண்டியவைMargazhi fasting 2019, thiruppavai, aandal
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express