super singer vikram wife vijay tv super singer vikram
super singer vikram wife vijay tv super singer vikram : விஜய் தொலைக்காட்சியில் சுமார் 10 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். பெரியவர்கள், சிறுவர்கள் என இரண்டு பிரிவாக நடைபெறும் இதில் 16 வயதுக்கு மேல் இருப்பவர்கள் சீனியர் பிரிவிலும்,16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஜூனியரிலும் கலந்து கொண்டு வருகின்றனர்.
Advertisment
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் சீசன் 7. இந்நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றுக்கு மூக்குத்தி முருகன், விக்ரம், புண்யா, சாம் விஷால், கவுதம் ஆகியோர் தகுதி பெற்றனர். சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே
கோயம்புத்தூரில் பிரமாண்டமாக நடந்தது
இதில், அனிருத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், முகென் ராவ், திவ்ய தர்ஷினி, பாடகர்கள் திவாகர், பிரியங்கா ஆகியோர் பலரும் கலந்து கொண்டனர்.வெத்திலய போட்டேண்டி ஆகிய பாடல்களை மூக்குத்தி முருகன் பாடியதோடு, ரசிகர்களின் அமோக வரவேற்பு பெற்றார்.
Advertisment
Advertisements
இதையடுத்து, இந்நிகழ்ச்சியின் இறுதியில் மூக்குத்தி முருகன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ.50 லட்சத்திற்கான வீடு பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அனிருத் இசையில் பாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இவரைத் தொடர்ந்து விக்ரமேலும், அனிருத் இசையில் பாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இவரைத் தொடர்ந்து விக்ரம் 2ஆவது இடம் பெற்றார். அவருக்கு 25 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் பரிசாக அறிவிக்கப்பட்டது.
கவுதம் ஏற்கனவே கடந்த 2012 ஆம் ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர் 3-ல் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் விக்ரம். இவருக்கு பெண் ரசிகைகள் தான் அதிகம் என்று சொல்லுவார்கள். அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு என்று பெண் ஒருவர் இவருக்கு கடிதம் எழுதுவது போன்ற வதந்தியை உருவாக்கி தொகுப்பாளர்கள் அவரை கலாய்த்துக் கொண்டும் இருப்பார்கள்.
அந்த விக்ரம் இப்ப சிங்கிள் இல்லை பாஸ்.அவருக்கு போன வருடமே நிச்சயதார்த்தம் முடிஞ்சிடிச்சி. கல்யாணத்திற்காக வெயிட்டிங். இனி காதல் கடிதம் எப்படி வரும் பாருங்க.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil